Sunday, September 07, 2014

On Sunday, September 07, 2014 by Unknown   


திருமூர்த்தி அணையிலிருந்து, பரம்பிக்குளம் பிரதான கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய், உயர்மட்டக் கால்வாய் மற்றும் தளிவாய்க்கால் பாசன அமைப்பின் கீழ் உள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்காக, நாளைமுதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதன்மூலம், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 96,987 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள பரம்பிக்குளம் பிரதான கால்வாய் மற்றும் தளி வாய்க்கால் பாசன அமைப்பின் கீழ் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி, திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக் குழு மற்றும் தளி வாய்க்கால் வடபூதிநத்தம் பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

வேளாண் பெருங்குடிமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருமூர்த்தி அணையிலிருந்து, பரம்பிக்குளம் பிரதான கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய், உயர்மட்டக் கால்வாய் மற்றும் தளிவாய்க்கால் பாசன அமைப்பின் கீழ் உள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்காக, நாளைமுதல் தண்ணீர் திறந்துவிட தாம் ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். இதனால், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 96,987 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

0 comments: