Monday, September 22, 2014

On Monday, September 22, 2014 by Unknown in ,    


பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக் கோரி விஜயாபுரம், கவுண்டம்பாளையம் பகுதி விவசாயிகள் பொங்கலூர் பிஏபி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பொங்கலூர் பகுதியில் 2-ஆம் மண்டலத்திற்கு பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டு பாசனம் நடைபெற்று வருகிறது. பெத்தாம்பாளையம் பிரதான வாய்க்காலில் இருந்து தண்ணீர், பெருந்தொழுவு பகுதி பாசனத்திற்கு பின்னர் விஜயாபுரம், கவுண்டன்பாளையம் பகுதிக்கு விட வேண்டும். அதன்படி திறந்து விடப்பட்ட தண்ணீர் 2 மணி நேரம் மட்டுமே விடப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டதாம்.
இதனால் ஆவேசமடைந்த விஜயாபுரம், கவுண்டம்பாளையம் பகுதி விவசாயிகள், பொங்கலூர் பிஏபி அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த பிஏபி உதவிப் பொறியாளர் சிங்காரவேலு, அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளர் வினோத் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், விரைவில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

0 comments: