Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
அவினாசி காமராஜர் நகர் குடியிருப்பு நல சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவர் வேலுமணி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குமாரராஜா, செயலாளர் துரைசாமி, துணைச் செயலாளர் நடராஜ், பொருளாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
காமராஜ் நகரில் சாக்கடை வசதி இல்லாததால் ஒவ்வொரு வீட்டின் முன்புறமும், கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே சாக்கடை கட்டித் தரவேண்டும். பூங்காவில் குழந்தைகள் விளையாட உபகரணங்கள் தரவேண்டும்.
பூங்காவின் வடபகுதியில் புதர்மண்டி கிடப்பதால் பாம்புகள் நடமாடுகின்றன. இப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். பூங்காவில் நடைபயிற்சி செய்ய அக்குபஞ்சர் கல் பதிக்க வேண்டும்.
பூங்காவின் சுற்றுப் புறத்தில் அமைக்கப்பட்ட கம்பி வேலிகள் கீழே இறங்கிவிட்டதால் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் உள்ளே வர ஏதுவாக உள்ளது. எனவே கம்பி வேலியை சரி செய்ய வேண்டும்.
இப்பகுதியில் பாலித்தீன் பைகள், காகித குப்பைகள் நிறைந்துள்ளது. எனவே வீதி கூட்டுபவர்கள் அன்றாடம் இங்கு வந்து சுத்தம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகள் அவினாசி பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 comments: