Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
திருவண்ணாமலையை சேர்ந்த ராஜகோபாலின் மகன் அமரேசன் (வயது 32). கார்பெண்டர். இவர் தனது மனைவி தங்க மணி (26) மற்றும் குழந்தைகள் அனுஷியா (5), சபரி (1) ஆகியோருடன் திருவண்ணாமலையில் இருந்து கோவை பெரிய நாயக்கன்பாளையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.
வேன் அவினாசியை அடுத்த வேலாயுதம்பாளையம் அருகே வந்தபோது திடீரென என்ஜின் பகுதியில் தீப்பிடித்தது. அதிர்ச்சியடைந்த வேனில் இருந்த அனைவரும் கீழே இறங்கினர். தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பற்றி வேன் முழுவதும் பரவியது.
தகவல் அறிந்ததும் திருப்பூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ பற்றியதும் வேனை விட்டு இறங்கியதால் 4 பேரும் காயம் இன்றி உயிர் தப்பினர்.

0 comments: