Wednesday, May 06, 2015

On Wednesday, May 06, 2015 by Unknown in ,    




திருப்பூர் அருகே, செட்டிபாளையம் பகுதியில் வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்கியதில் திமுக பிரமுகர், அவரது மனைவி, மகன் கொலை செய்யப்பட்டனர்.
திருப்பூர், செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் (64). இவர் 3-ஆவது வார்டு திமுக கிளைச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி சாரதாம்பாள் (52). மகள் ஷோபனா (28). மகன் நவீந்திரன் (26). இவர், 1-ஆவது வார்டு திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்.
இந்நிலையில், சிவசுப்பிரமணியத்தின் வீட்டுக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த மர்ம நபர்கள் இரும்புக் கம்பியால் வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.   அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது, சிவசுப்பிரமணியம், சாரதாம்பாள் ஆகியோர் உயிரிழந்து கிடந்துள்ளனர். மகன் நவீந்திரன் கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், நவீந்திரனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் நவீந்திரன் உயிரிழந்த நிலையில் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டார். மேலும் பலத்த காயமடைந்த ஷோபனா திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 இதுகுறித்து போலீஸார் கூறியது:
நகைகள் சிதறிக் கிடப்பதைப் பார்க்கும்போது, இது கொள்ளை முயற்சிக்காக நடைபெற்ற கொலையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும், இவர்களது கார் ஓட்டுநர் தலைமறைவாகி உள்ளார். எனவே, தனிப்படை அமைத்து இவ்வழக்கில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றனர். இதுகுறித்து, அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

0 comments: