Wednesday, May 06, 2015

On Wednesday, May 06, 2015 by Unknown in ,    
திருப்பூர், செவந்தம்பாளையம் தடுப்பணையில் கட்டடக் கழிவை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
திருப்பூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம், செவந்தம்பாளையம், கணபதிபாளையம், ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் அளித்த மனு விவரம்:
செவந்தம்பாளையம் தடுப்பணையில், திருப்பூர் மாநகராட்சி 37-ஆவது வார்டு கவுன்சிலர் காந்திமதி, அவரது கணவர் எம்.ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கட்டடக் கழிவை கொட்டியுள்ளனர். இதனால் நீரோட்டம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியை சுற்றியுள்ள விவசாயிகளின் நீராதாரமாக விளங்கும் இத்தடுப்பணையில் உள்ள கழிவை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 comments: