Wednesday, May 06, 2015

On Wednesday, May 06, 2015 by Unknown in ,    
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, கருவலூர் மாரியம்மன் கோயிலில் 108 விளக்குப் பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
  மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அப்பேரவையின் மாவட்ட இணைச் செயலாளர் அ.ஜெகதீசன் தலைமை வகித்தார். பேரவை மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் மு.சுப்பிரமணியம், ஒன்றியக் குழுத் தலைவர் பத்மநந்தினி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி ஆகியோர் விளக்குப் பூஜையை தொடங்கி வைத்தனர். இதையடுத்து 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர்ஆனந்தகுமார், நகரச் செயலாளர் ராமசாமி,  பேரூராட்சித் தலைவர் ஜெகதாம்பாள் ராஜசேகர்,  துணைத் தலைவர் மூர்த்தி, பூண்டி நகரச் செயலாளர் விஸ்வநாதன், முன்னாள் தலைவர் லதா சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: