Wednesday, May 06, 2015

On Wednesday, May 06, 2015 by Unknown in ,    
நபார்டு வங்கித் திட்டத்தின் மூலம், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அழகுக் கலைப் பயிற்சி முகாம் உடுமலையில் நடைபெற்றது.
ஏப்ரல் 20 முதல் மே 5-ஆம் தேதி வரை 15 நாள் இந்த முகாம் நடைபெற்றது. இதில், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். 
முகாமில், மணப்பெண் அலங்காரம் முதல் அனைத்து அழகுக் கலைப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இந்நிலையில், இதன் நிறைவு விழா உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உடுமலை நேசக்கரங்கள் இயக்குநர் பால்நிலா, இணை இயக்குநர் நேசமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், மே 6 முதல் மே 20-ஆம் தேதி வரை 13 நாள்களுக்கு நபார்டு வங்கி திட்டத்தின் மூலம் இலவச நவீன ஆடைகள் வடிவமைப்பு பயிற்சி நடைபெற உள்ளது.

0 comments: