Wednesday, May 06, 2015

On Wednesday, May 06, 2015 by Tamilnewstv in    


 திருச்சிராப்பள்ளி புத்தூர் வயலூர்ரோடு பாரதிநகர் சர்ச் காலனி மற்றும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் திருட்டு பயங்கள் அதிகமாக இருப்பதினாலும் பல சமூக விரோதிகளினால் செயின் பறிப்பு இரு சக்கர வாகன திருட்டுகள் ஆகியவை நடப்பது  அச்சம் ஊட்டுவதாலும் திருச்சிராப்பள்ளி மாநகர காவல்துறை ஆணையர் சஞ்சய்மாத்தூர் உத்தரவுபடியும் npஜயந்தி குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் திருச்சி நகரம்  மற்றும் சரோஜ் தாகூர் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் மேற்பார்வையிலும் ஸ்ரீரங்கம் கோட்டம் காவல்துறை உதவி ஆணையர்கள் கபிலன் ராமமூர்த்தி ஆலோசனைக்கேற்ப கடந்த 30.3.15 பாரதிநகரில் ஒரு பாதுகாப்பு விழிப்புணர்வுகூட்டம் நடைபெற்றது.
அதில் காவல்துறை ஸ்ரீரங்கம் கோட்டம் காவல்துறை உதவி ஆணையர்கள் கபிலன் ராமமூர்த்தி மற்றும் உறையூர் ஆய்வாளர்கள் கென்னடி சீத்தாராமன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசன்  அழகர் கலந்து கொண்டு திருட்டு குற்றங்களை தடுப்பதற்கு சிசிடிவி கேமாராக்களை பாரதி நகரில் முக்கிய பகுதிகளில் அமைத்தால் அவற்றை காவல்துறை கண்காணித்து பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு வசதியாக இருக்கும் என ஆலோசனை வழங்கினார்கள் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு பாரதிநகரில் உள்ள 1முதல் 14 வரை உள்ள அனைத்து குறுககுச்சாலைகளிலும் பிரதான சாலைகளிலும் மற்றும் சர்ச் காலனியிலும் சேர்ந்த வீட்டு உரிiயாளர்களும் குடியிருப்போரும் அவர்ரவர்கள் சொந்த செலவில் 300000 மூன்றுலட்சம் வரை நிதி திரட்டி 6 இடங்களில் அதிக தி;றன் கொண்ட சிசிடிவி கேமராக்களை பாரதிநகர் வீட்டு உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் உதவி செயலர் பழனியப்பன் உதவி தலைவர் விக்டர் பொருளாளர் ஸ்ரீனிவாசன் செயற்;குழு உறுப்பினர் தியாகராஜன் சுப்பிரமணியன் மற்றும் ஜெயகுமார் கிருஷ்ணசாமி சங்க உறுப்பினர்களும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது  இது தமிழகத்தில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிசிடிவி கேமராக்களை இன்று திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர்   சஞ்சய் மாத்தூர் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் npஜயந்தி குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் திருச்சி நகரம்  மற்றும் சரோஜ் தாகூர் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் மேற்பார்வையிலும் ஸ்ரீரங்கம் கோட்டம் காவல்துறை உதவி ஆணையர்கள் கபிலன் ராமமூர்த்தி மற்றும் உறையூர் ஆய்வாளர்கள் கென்னடி சீத்தாராமன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசன்  அழகர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

0 comments: