Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
பல்லடம் நகராட்சி கமிஷனர் நாராயணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வியாபாரிகள் உள்பட 75 பேர் நேற்று மாலை நகராட்சி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
வியாபாரிகள் சங்கத்தலைவர் ஆனந்த செல்வராஜ், தி.மு.க. நகர செயலாளர் பழனிசாமி, த.மு.மு.க. மாவட்ட தலைவர் சலீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களிடம் தாசில்தார் அம்சவேணி, இன்ஸ்பெக்டர் முருகதாஸ் ஆகியோர் பேச்சுவாத்தை நடத்தினர்.
வியாரிகள் தரப்பில் முத்துமீரான் என்பவர் கூறும்போது,
கடைக்கு வந்த சரக்கை இறக்கிக்கொண்டிருந்தோம். அப்போது நகராட்சி வாகனத்தில் வந்த கமிஷனர் சரக்கு இறக்கும் வாகனத்தை உடனே எடுக்குமாறு ஒருமையில் தகாத வார்த்தையில் திட்டினார். மேலும் ஆய்வு என்ற பெயரில் கடைக்குள் வந்து உணவு பொருட்களை சேதப்படுத்துகிறார்.
பொறுப்புள்ள அதிகாரியாக செயல்படாத கமிஷனர் நாராயணனை மாற்ற வேண்டும். மேலும் அவர் மீது போலீசில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டு என்றனர்.
இது குறித்து கேட்ட தாசில்தார் அம்சவேணி வியாபாரிகளிடம் கூறுகையில்,
புகார் கொடுங்கள் அது கலெக்டருக்கு பரிந்துரைக்கப்படும். போலீசாரும் ரசீது வழங்குவார்கள் என்று உறுதியளித்தார். சமாதானம் அடையாத வணிகர் சங்கத்தினர் இன்று பல்லடத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.
அதன்படி பல்லடத்தில் இன்று 1000–க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இது குறித்து கமிஷனர் நாராயணன் கூறும்போது, பள்ளி அருகே ரோட்டை ஆக்கிரமித்துள்ளனர். உரிமம் இல்லாமல் கடை நடத்தி வருகிறார்கள். மேலும் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்வதை தடுத்தேன்.
என்.ஜி.ஆர். ரோடு நகராட்சி வணிக வளாகத்தில் உள்ள 40 கடைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் தான் வந்தது. மறு ஏலம் நடத்தி ரூ.65 லட்சம் வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் வாக்குவாதம் செய்தனர். தேவையில்லாமல் பிரச்சினை கிளப்பிய 2 பேர் மீது போலீசில் புகார் செய்துள்ளேன் என்றார்.
கடையடைப்பு போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது

0 comments: