Saturday, May 09, 2015

On Saturday, May 09, 2015 by Unknown in ,    



தமிழக-கேரள எல்லையில் உள்ள உடுமலை வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளனரா என க்யூ பிரிவு போலீஸார், வனத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை, அமராவதி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, பொள்ளாச்சி என 6 வனச் சரகங்கள் உள்ளன. இதில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளன.
 பல்வேறு குற்றச் செயல்பாடுகள் இந்த வனச்சரகங்களில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இங்குள்ள ஒரு சில மலைக் கிராமங்களில் மர்ம நபர்கள் சிலர், துப்பாக்கிகளுடன் நடமாடுவது குறித்து க்யூ பிரிவு போலீஸார் அவ்வப்போது அரசுக்கு தகவல் தகவல் தெரிவித்து வருகின்றனர். வன விலங்குகளைக் கணக்கெடுப்பதற்காக வனப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்களில், ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நடமாடுவது பதிவாகியுள்ளது.
இத்தகைய மர்ம நபர்கள், சந்தனக் கட்டைகளைக் கடத்துபவர்களா, வன விலங்குகளை வேட்டையாடுபவர்களா அல்லது மாவோயிஸ்ட்டுகளா என்ற சந்தேகம் தற்போது  போலீஸார், வனத்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.
  இந்நிலையில், உடுமலை வனச்சரகத்திற்கு உள்பட்ட புங்கன் ஓடை என்ற இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரவிகிரன் சாகு (21) என்பவரை வனத் துறையினர் கைது செய்து, விசாரித்துள்ளனர். உடுமலை,  அமராவதி வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம்  உள்ளதா என க்யூ பிரிவு போலீஸார் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டியது அவசியம்.
 இது குறித்து வனத்துறையினர் கூறியது:
  வனப் பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாடுவது உண்மைதான். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகளை கைப்பற்றும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்துள்ளது. தமிழகம்-கேரளம் எல்லையில் உள்ள மலைக் கிராமங்களைக் கண்காணிக்க
சிறப்பு அதிரடிப் படையை நியமிக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

0 comments: