Saturday, May 09, 2015

On Saturday, May 09, 2015 by Unknown in ,    


திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்கள்  ஞாயிற்றுக்கிழமை (மே 10) நடைபெறவுள்ளன.
  இது குறித்து திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கு.கோவிந்தராஜ்  வெளியிட்ட செய்தி: வாக்காளர் பட்டியில் உள்ள தவறுகளை சரிசெய்வது, வாக்காளர்களின் ஆதார் அடையாள அட்டை எண், செல்லிடப் பேசி எண், மின்னஞ்சல் முகவரியை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளுக்காக மே 10-ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. வாக்காளர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட படிவத்தில் ஆதார்
எண், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு, ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகலை இணைத்து சிறப்பு முகாம்களில்  ஒப்படைக்க வேண்டும்.

0 comments: