Saturday, September 13, 2014
கோவை, செப்.13–
கோவை சவுரி பாளையம் அருகேயுள்ள உடையாம்பாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 46). இவர் சவுரிபாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள தங்கரத்தினம் காம்ப்ளக்சில் ஸ்ரீ ஹரி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக தங்க, வெள்ளி நகைகள் வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் நேற்று இரவு 9.30 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் சங்கரின் நகைக்கடையில் கொள்ளை நடந்திருப்பதாக சிலர் தகவல் தெரிவித்தனர். உடனே சங்கர் நகை கடைக்கு விரைந்து வந்தார்.
பின்னர் பீளமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மறு நிமிடமே பீளமேடு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ்குமார், சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் மணிவர்மன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
நள்ளிரவில் யாரோ மர்ம மனிதர்கள் காம்ப்ளக்சிற்குள் புகுந்து முதல் மாடியில் உள்ள சங்கரின் நகைக்கடைக்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு கடைக்கு முன்பு உள்ள கிரில் கம்பியில் வெளியில் இருந்து பார்த்தால் மாடியில் என்ன நடக்கிறது என்று தெரியாத வண்ணம் கருப்பு நிற அட்டை பொருத்தியுள்ளனர். பின்னர் வெல்டிங் மிஷின் எந்திரத்தின் உதவியுடன் நகைக்கடையின் ஷட்டரை ஒரு நபர் உள்ளே நுழையும் அளவுக்கு வெட்டி எடுத்துள்ளனர்.
அதன்வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கு ஷோகேசில் இருந்த 1¼ கிலோ தங்க நகைளை மூட்டையாக கட்டி எடுத்து கொண்டு தப்பிவிட்டனர். ஆனால் கடையில் இருந்த வெள்ளி நகைகளை அவர்கள் தொடவில்லை.
அவை அப்படியே ஷோகேசில் இருந்தன. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
அது கொள்ளை நடந்த கடையில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று படுத்து கொண்டது. நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment