Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
கோவை, செப். 13–
கோவை மாநகர ஆயுதப்படை போலீசில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் முத்துசாமி. கடந்த சில நாட்களுக்கு முன்பு காந்திபுரம் பஸ் நிலையத்தில் இவருக்கும் தனியார் பஸ் டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அந்த தனியார் பஸ் டிரைவர், போலீஸ்காரர் முத்துசாமியை அடித்ததாக கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து அந்த பஸ்சை மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன் 7 பேர் சேர்ந்து வழிமறித்து டிரைவரை தாக்கினார்கள். இந்த சம்பவம் போலீஸ்காரர் முத்துசாமியின் தூண்டுதலின்பேரில் தான் நடந்ததாக புகார் கூறப்பட்டது.
இது குறித்து விசாரிக்குமாறு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் முத்துசாமி விதிமுறையை மீறி செயல்பட்டது தெரிய வந்தது. அதன்பேரில் முத்துசாமியை பணி இடைநீக்கம் செய்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

0 comments: