Saturday, October 11, 2014
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்து ஒரு நாள் போட்டி, மூன்று டெஸ்ட் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. முதலில் ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் இன்று பகல்–இரவு ஆட்டமாக நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்தது. இதன் படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் நேர்த்தியான ஆட்டத்தை கடைபிடித்தது. 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக சாமுவேல்ஸ் 116 பந்துகளில் 126 ரன்கள் குவித்து அசத்தினார். இந்தியா தரப்பில் முகம்மது சமி 66 ரன்கள் விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் தொடக்க ஜோடி 8.4 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரன் அவுட் மூலம் பிரிந்தது. ரகேனா 24 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் பின்னர் வந்த விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ராயுடு (2), ரெய்னா(0) தோனி (8) என அடுத்தது ஆட்டமிழந்ததால் இந்திய அணி 114 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரளவு நிலைத்து ஆடிய தவானும் 92 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுக்க இந்திய அணி 41 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி வரும் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...

0 comments:
Post a Comment