Sunday, October 19, 2014

On Sunday, October 19, 2014 by farook press in ,    
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
உடுமலை காந்தி சவுக் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 32). பழக்கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மதியம் தனது தாயாரை பார்ப்பதற்காக சென்று விட்டு உடுமலைக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார். தாராபுரம் ரோட்டில் சிவசக்தி காலனி அருகே வந்தபோது ஒரு வாலிபர் கையை காட்டி மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தினார்.
குணசேகரன் மோட்டார்சைக்கிளை நிறுத்தியதும், அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.420–ஐ பறித்ததாக கூறப்படுகிறது. பின்னர் தான் அங்கிருந்து குறிப்பிட்ட தூரம் சென்று மறையும் வரை சத்தம் போடக்கூடாது என்று எச்சரித்து விட்டு புறப்பட்டதாகவும், சிறிது தூரம் சென்றதும் குணசேகரன் திருடன், திருடன் என்று சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது. உடனே சத்தம் கேட்டு அங்குவந்தவர்களை அந்த வாலிபர் மிரட்டி தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து குணசேகரன் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் உடுமலை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்ததாக கூறப்படும் வாலிபரை தேடிவந்தனர். போலீசாருடன் குணசேகரன் வழிப்பறி செய்த வாலிபரை அடையாளம் காட்டுவதற்காக சென்றார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை உடுமலை–பழனி ரோட்டில் மத்திய பஸ் நிலையம் அருகே சென்றபோது அங்கு அந்த வாலிபர் வந்துகொண்டிருந்தார். உடனே போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த வாலிபரிடம் கத்தி மற்றும் ஆயுதம் இருந்தது.இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியலிங்கம், சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தாலப்பள்ளியைச் சேர்ந்த பொம்மணன் என்கிற ராசப்பன் என்பவரது மகன் கோவிந்தராஜ் (வயது 24) என்பது தெரியவந்தது.
மேலும் அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் உடுமலை காந்தி நகரைச் சேர்ந்த விவேகானந்தன் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது அவரது வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டில் இருந்த 9½ பவுன் நகையை திருடி சென்றதும் தெரியவந்ததுஇதேபோல் செந்தில்குமார் என்பவரது வீட்டின் பின்புறம் கதவை உடைத்து வீட்டில் இருந்து 3¾ பவுன் நகை மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடியதும், அண்ணா குடியிருப்பில் வெளியூர் சென்றிருந்த ஈஸ்வரசாமி என்பவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த ரூ.650 ரொக்க பணம், கைக்கடிகாரம் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது.
இதைதொடர்ந்து வாலிபர் கோவிந்தராஜ் கொடுத்த தகவலின் பேரில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசுகளை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதேபோல் பல வழிப்பறி, திருட்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்தது.

0 comments: