Saturday, March 28, 2015

On Saturday, March 28, 2015 by Unknown in ,    
திருப்பூர், : திருப்பூரில் இரு பள்ளியை சேர்ந்த மாணவர்களிடையே ஏற்பட்ட திடீர் மோதலால் பெற்றோர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். 
திருப்பூர் ஒரு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் நேற்று முன்தினம், இன்னொரு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர், தங்கள் பள்ளி மாணவியை கிண்டல் செய்த, மாணவனை தாக்குவதற்காக, நேற்று பள்ளிக்கு வெளியில் காத்திருந்தனர். அப்போது, 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிவிட்டு வெளியில் வந்த அந்த மாணவனை நடுரோட்டில் வைத்து கண்மூடித்தனமாக  மாணவர்கள் தாக்கினர். 

அப்போது, தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் பள்ளியை சேர்ந்த மாணவர்களும் வந்ததால், இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதனால் அப்பகுதி போர்க்களமானது. அப்போது, அருகில் உள்ள தனியார் பள்ளியிலிருந்து தங்களது குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியில் வந்த பெற்றோர், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தாக்குதலில் பெற்றோர் ஒருவரின் இருசக்கர வாகன கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் அந்த மாணவர்களை பிடிக்க முயற்சித்தனர். இதில் அனைவரும் தப்பி ஓடிய நிலையில் ஒரு மாணவன் மட்டும் சிக்கிக்கொண்டான். அவனை பிடித்து அருகில் இருந்த போக்குவரத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த மாணவனை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்

0 comments: