Saturday, March 28, 2015

On Saturday, March 28, 2015 by Unknown in ,    
கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக மாணவர்களிடம் பணம் வசூலிப்பதாக, தனியார் பள்ளி மீது முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்-ஊத்துக்குளி சாலை பாளையக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களுக்காக மாணவர்கள் தலா ரூ.1,000 நன்கொடை தர வேண்டுமென பள்ளி நிர்வாகம் சார்பில் கேட்டதாகத் தெரிகிறது. இதன்படி, நன்கொடை செலுத்தாததால் 4-ஆம் வகுப்பு படித்து வரும் திருப்பூர் கோல்டன் நகரைச் சேர்ந்த குமரேசன் என்பவரது மகன் அபினவ், வியாழக்கிழமை நடைபெற்ற ஆங்கிலத் தேர்வை எழுத அனுமதி மறுக்கப்பட்டதாம்.
இதனால், ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர் சிலர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகனிடம் இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை முறையிட்டனர்.
அப்போது அவர்கள் அளித்த மனுவில், "ஏற்கெனவே அப்பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக ரூ.1,000 செலுத்தக் கூறினர். அந்தத் தொகையைச் செலுத்த முடியாத மாணவர்களை தேர்வு எழுத அனுமதி மறுக்கின்றனர். இதுதொடர்பாக உரிய பதிலையும் பள்ளி நிர்வாகம் தெரிவிப்பதில்லை. இந்தப் பிரச்னையில் கல்வித் துறை அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், இப் புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்

0 comments: