Saturday, March 28, 2015

On Saturday, March 28, 2015 by Unknown in ,    
அவசர தேவையின்போது, குறுஞ்செய்தி மூலமாக காவல் துறையின் உதவியை பெறுவது குறித்து பொதுமக்களுக்கு திருப்பூர் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அவசர காலங்களில், செல்லிடப்பேசி மூலமாக குறுந்தகவல்களை அனுப்பி காவல் துறையின் உதவி பெறும் வசதியை திருப்பூர் மாநகர காவல்துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. அதன்படி, 94876 61100, 94897 71100 ஆகிய செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாக, சம்பந்தப்பட்ட இடத்துக்கு போலீஸார் உடனடியாக அனுப்பப்பட்டு, அவர்கள் மூலமாக தேவையான உதவி அளிக்கப்படும்.
இதுகுறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இந்நிலையில், குறுஞ்செய்தி மூலம் காவல் துறை உதவி பெறும் வசதி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு மாநகர காவல் ஆணையர் எஸ்.என்.சேஷசாய் உத்தரவிட்டார். அதன்படி, திருப்பூர்
மாநகரில் போலீஸார் வாகனத் தணிக்கை, ரோந்துப் பணியின்போது, குறுஞ்செய்தி மூலம் காவல்துறை உதவியை பெறும் வசதி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் வைத்துள்ள செல்லிடப்பேசியில், குறுஞ்செய்தி அனுப்புவதற்கான காவல் துறை செல்லிடப்பேசி எண்களையும் போலீஸார் பதிந்து தருகின்றனர்.
இதுகுறித்து திருப்பூர் ரயில் நிலையப் பகுதியில் திருப்பூர் வடக்குப் போலீஸார் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

0 comments: