Saturday, March 28, 2015

On Saturday, March 28, 2015 by Unknown in ,    



திருப்பூர்,: போக்குவரத்து போலீசார்க்கு நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் உதவி கமிஷனர் மகுடபதி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் பழனிக்குமார், பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆலோசனை கூட்டத்தில் உதவி கமிஷனர் பேசியதாவது:  திருப்பூர் மாநகரில் 30க்கு மேற்ப்பட்ட சரக்கு ஆட்டோ, மினி வேன்களில் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. 100க்கு மேற்ப்பட்ட பால் விற்பனையாளர்கள் டூவீலரில் வீதிதோறும் வீடு வீடாக சென்று பால் சப்ளை செய்து வருகின்றனர். அதிகாலை 3 மணியில் இருந்து காலை 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பால் சப்ளை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அவரது வாகனங்களில் ஏர் ஹாரன் பயன்படுத்தி வருகின்றனர். 

ஏர் ஹாரனில் வரும் அதிக சத்தம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது. படிக்கும் மாணவர்கள், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே ஏர் ஹாரன் பயன்படுத்த கூடாது. மேலும், ஏர் ஹாரன் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு தெரிவித்தார்.

0 comments: