Saturday, March 28, 2015

On Saturday, March 28, 2015 by Unknown in ,    
திருப்பூர், : அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்பது குறித்து பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்பது குறித்து ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20ம் தேதி, உலக சிட்டுக்குருவி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திருப்பூர் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில் சிட்டுக்குருவி விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் அனைத்து மாணவ மாணவியர்களும் கலந்துக்கொண்டணர். இதில், சிட்டுக்குருவியின் முக்கியத்துவத்தை பள்ளி செயலர் டாக்டர் சிவகாமி அனைத்து மாணவ மாணவியருக்கும் எடுத்துரைத்தார். மாணவர்களிடம் உரையாடல் மூலம்  சிட்டுக்குருவியின் பயன்கள் அவற்றின் நன்மைகள், உணவு முறைகள், போன்றவற்றை கேட்டறிந்தும், மாணவர்களுக்கு சிறந்த முறையில் விளக்கமளித்தார். 

திருப்பூர் இயற்கை கழகம் செயலர் ரவீந்திரன் மாணவ, மாணவிகளுக்கு பறவைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மாணவர்களுக்கு களப்பயணத்தின் வாயிலாக  சிட்டுக்குருவிகள், பல புதர்செடிகளில்  காண்பிக்கப்பட்டு  கூடுகட்டும் முறை யையும் அதற்குத் தேவை யான தேங்காய் நார்கள் துடைப்பக்குச்சிகள், வைக் கோல், காய்ந்த புல்லின் நார்கள், இலைதழைகள் போன்ற பொருட்களையும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் காண்பிக்கப்பட்டன. மேலும் பள்ளி தலைமையாசியரால் மாணவர்களுக்கு டிஜிட்டல் வீடியோ மூலம் படங்கள் காண்பிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளித்தாளாளர் சிவசாமி, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

0 comments: