Saturday, March 28, 2015

On Saturday, March 28, 2015 by Unknown in ,    




திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி முழுவதும் பெரும்பாலானவர்களுக்கு ஆதார் அட்டை இன்னும் கிடைக்கவில்லை. இந்நிலையில் முதியோர் உதவித்தொகை பெறவும், காஸ் சிலிண்டர் மானியம் பெறவும், நலவாரியத்தில் பதிவு செய்வதற்கும், பாஸ்போர்ட் பெறுவதற்கும், வாக்காளர் அடையாள அட்டைக்கும் என்று பல்வேறு பணிகளுக்கு ஆதார் அட்டை அவசியம் என்று அறிவித்துள்ளனர்.

 இதனால், ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுப்பதற்காகவும், அதற்கு விண்ணப்பிக்கவும் பொதுமக்கள் தினமும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். மேலும், அவ்வாறு விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுத்தால் அதை பதிவு செய்து புகைப்படம் எடுக்க சுமார் ஒரு ஆண்டு கழித்து வரும்படி டோக்கன் கொடுத்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு பொதுமக்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு உடனடியாக வார்டு வாரியாக புகைப்படம் எடுத்து அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். தற்போது மனுக்களோடு வந்துள்ள பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு அதற்கான ஒப்புகை சீட்டை வழங்கும் படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. 

பா.ஜ.க., 11வது வார்டு தலைவர் ரவிக்குமார் அளித்த மனுவில், சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த 3 மாதங்களாக துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, பாமாயில் போன்றவை வழங்கப்படவில்லை. கடை விற்பனையாளரிடம் கேட்டால், நுகர்பொருள் வாணிப கிட்டங்கியிலேயே இருப்பு இல்லை என்று கூறுகிறார். எனவே, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அனைத்து பொருட்களும் மாதம்தோறும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.  ஆம்-ஆத்மி கட்சியினர் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகரின் முக்கிய பிரச்னையாக போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது. உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து திருப்பூர் வரும் அனைத்து பஸ்களும் நகரத்துக்குள் வந்து செல்வது தான் போக்குவரத்து நெருக்கடிக்கு முக்கிய காரணமாக உள்ளது.

0 comments: