Wednesday, April 08, 2015

On Wednesday, April 08, 2015 by Unknown in ,    


தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்தி
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத மாற்றுத்திறனாளியான படித்த இளைஞர்களுக்கு, மாதந்தோறும் தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
 அதனடிப்படையில், பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ. 300, பிளஸ் 2 படித்தவர்களுக்கு ரூ. 375, பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு ரூ. 450 வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.
இந்த உதவித் தொகையைப் பெற, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுக்கு மேல் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவராக இருக்க வேண்டும்.
 2015-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதியன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும்.
 மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ, மாணவியராக இருக்கக் கூடாது. ஆனால், தொலைதூரக் கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
 இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொண்டு பயன்பெறலாம்.

0 comments: