Wednesday, April 08, 2015

On Wednesday, April 08, 2015 by Unknown in ,    













திருப்பூர்  மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ரூ 120 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது . மேலும் இப்பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ரூ .125 கோடியில் கல்லூரி மாணவியர் விடுதி ,பிற்பட்டோர் நலத்துறை மூலம் கல்லூரி மாணவியர் விடுதி ஆகிய கட்டடங்கள் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது . இப்பணிகளை மாவட்ட ஆட்சிதலைவர் திரு .கு .கோவிந்தராஜ் இ ஆ .ப .அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க  உத்திரவிட்டார் .  முன்னதாக  உடுமலைபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் .அலுவலக பதிவேடுகளை பார்வையிட்டார் . மேலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்காக தார் ,டின் ,இரும்பு கம்பிகளின் இருப்புகளை பார்வையிட்டார் மேலும் அம்மா சிமெண்ட் மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தப்படும் சிமெண்ட் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ள குடோன்களை ஆய்வு செய்தார் . சிமெண்ட் குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சிமெண்ட் மூட்டைகளின் இருப்பு பதிவேட்டினை பார்வையிட்டார் கம்பி சிமெண்ட் ஆகியவற்றை வளர்ச்சி நடைபெறும் இடங்களுக்கு விரைந்து அனுப்பி வைத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார் . இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் [பொ ]ஊரக வளர்ச்சி முகமை திரு .ரூபன் சங்கர்ராஜ்  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் [வளர்ச்சி ] திரு .எஸ் .கார்த்திகை இரத்தினம் ,உடுமலை வருவாய் கோட்டாட்சியர் திரு .சாதனைக்குரள் ,ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்ப்பொறியாளர்  திரு .நாகேந்திரன் ,வட்டார வளர்ச்சி அலுவலகர்கள்  திரு .பழனிவேல் ,திரு .முகமது உசேன் ,உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் திரு .சைபுதீன் ,உடுமலை நகராட்சி ஆணையர் திரு .கெ .சரவணக்குமார் மற்றும் அரசு அலுவலகர்கள் கலந்து கொண்டனர் .

0 comments: