Wednesday, August 24, 2016

On Wednesday, August 24, 2016 by Tamilnewstv
திருச்சி 24.8.16                 சபரிநாதன் 9443086297
திருச்;சியில் பொதுச்சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் திருச்;சிராப்பள்ளி மாவட்டம் மற்றும் 8 மாவட்டங்கள் பங்கு பெற்ற மண்டல அளவில் மாபெரும் பட்டினி போராட்டம்
பொதுச்சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மற்றும் 8 மாவட்டங்கள் திருச்சி புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகை அரியலூர் பெரம்பலூர் மற்றும் கரூர் பங்கு பெறும் மண்டல அளவில் மாபெரும் பட்டினி போராட்டம் மத்தியபேருந்து நிலையம் அருகே திருவள்ளுர் பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது .
அதில் பேட்டியளித்த மாநில தணிக்கையாளர் ஹரிகிருஷ்ணன் கூறுகையில் கடந்த 7.5.13 நாளிட்ட உச்ச நீதி மன்றதீ{ர்ப்பினை முழுமையாக அமுல் படுத்திட வேண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் நடைபெற்ற காலகட்டத்தில் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்ற நிபந்தைனையுடன் பதவி உயர்வு பெற்று பிறகு உயர் நீதிமன்றம் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில்  வெற்றி வாய்ப்பை இழந்த பின்னரும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பணியில் தொடரும் 186 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களை உடனடியாக பதவி இறக்கம் செய்ய வலியுறுத்தியும் தற்சமயம் காலியாக உள்ள 106 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் 62 மருத்துவ மல்லா மேற்பார்வையாளர்கள் பணியிடங்களையும் பதவி இறக்காததால் காலியாகும் 186 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட N காரியும் நீதிமன்ற தீர்ப்பினை உள்நோக்கத்துடன் கால தாமதம் செய்யும் அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரியும்  மேற்கண்ட இப்பிரச்சனைகளை பேசித்தீர்ப்பதற்கு இயக்குனர் பொதுசுகாதாரத்துறை அவர்களை அணுகும் சங்க கோரிக்கைகளையும்ட ஊழியர்பிரச்சனைகளையும் பரிசீலிக்க கூட உட்படுத்தாத இயக்குனர் குழந்தைசாமி பொது சுகாதாரம் அவர்களை கண்டித்தும் தான் இந்த பட்டினி போரட்டம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பிஎச்ஒஎ சொக்கலிங்கம் தலைமை வகித்தார் செல்வராஜ மாவட்ட தலைவர் கரூர் முன்னிலை வகுத்தார் பாக்கியசெல்வம் மாநகர துணை தலைவர் வரவேற்புரையாற்றினார்.பட்டினிப்போராட்டத்தை இளங்கோவன் டிஎன்ஜியிஎ துவக்கிவைத்தாhஹரிகிருஷ்ணன் மாநில தணிக்கையாளர் பிஎச்டிஒஎ கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.இளங்கோவன் மாவட்ட செயலாளர் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் நன்றியுரையாற்றினார்.

பேட்டி ஹரிகிருஷ்ணன்.