Monday, June 26, 2017

On Monday, June 26, 2017 by Tamilnewstv   
திருச்சி                20.06.17
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் குடுப்பத்துடன் மனித சங்கிலி போராட்டம்
உச்சிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நான்காயிரம் மதுபான கடைகள் மூடப்பட்டன.
இதில் பணியாற்றிய இருபதாயிரம் பணியாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று பணி வழங்ககோரியும்ää பணியிழந்த தொழிலாளர்களுக்கு அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுதுறை நிறுவனங்களில் அவர்களின் கல்வி அடிப்படையில் உடனடியாக பணி வழங்க கோரியும் பணிகொடை மற்றும் ஓய்வூதிய நிலுவ தொகையினையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்ககோரியும் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் மாநில சிறப்பு தலைவர் பா.சுப்ரமணியன் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள்ள தங்கள் குடும்பத்தினருடன் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இப்போராட்டமானது உழவர்சந்தை மைதானத்திலிருந்து சாஸ்திரி சாலைவழியாக புதிய பாஸ்போர்ட் அலுவலகம் வரை நீடித்தது. முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுத்தி உழவர் சந்தை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேட்டி : கு.பாலசுப்ரமணியன் மாநில சிறப்புத்தலைவர்.

0 comments: