Friday, July 14, 2017

On Friday, July 14, 2017 by Tamilnewstv   


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் பேட்டி..


நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பியிருக்கிற சட்டத்திற்கு இதுவரை குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் மாநில அரசு பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 % சேர்க்கையில் இடஒதுக்கீடும் , மத்திய அரசு பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 15 % இடஒதுக்கீடும் செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டிய நிர்பந்தம் தமிழக அரசிற்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இது எதிர்ப்பார்த்த ஒன்று தான். தமிழக முதல்வர் உடனடியாக பிரதமரை நேரில் சந்தித்து, உள்துறை அமைச்சகத்தில் இருந்து குடியரசுத்தலைவரின் பார்வைக்கு செல்லாத அந்த சட்டங்களை குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற அனுப்பி வைக்க வேண்டும் என வலியறுத்த வேண்டும்.மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.  இதில் மேல்முறையீட்டுக்கு செல்வதில் எந்த பயனும் இல்லை.


மீத்தேன், ஷெல் போன்ற எரிவாயு திட்டங்களை மத்திய அரசு  முற்றிலும் கைவிடுவது தமிழ் மக்களின் உணர்வுகளை மதிப்பதாக அமையும். கதிராமங்கலத்தில் போராடுபவர்கள் மீது அடக்குமுறை செய்வது கண்டனத்திற்குரியது. கைது செய்யப்பட்டவர்க்ளை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.


தமிழகம் முழுவதும் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. மதுரையில் மதுக்கடைக்கு எதிராக போராடிய முத்தமிழன் படுகொலை செய்யப்பட்டார். திருச்சி மண்ணச்சநல்லூரில் கதிரேசன் என்பவரை  சாதாரண  பிரச்சனைக்காக கட்டி வைத்து அடித்து படுகொலை செய்துள்ளனர். இப்படி சாதி வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பது அதிர்ச்சியளிக்கிறது. தலித் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்.


GST வரி விதிப்பால் விலைவாசி குறையும் என்று மோடி அறிவித்தார். ஆனால் அது சாதாரண மக்களை கடுமையாக பாதிக்க கூடிய வகையில்  அமைந்துள்ளது. இந்த வரி விதிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதித்து ஒப்புதலை பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும்.


இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் பணம் கொடுத்தவர் , வாங்கியவர் பெயர் இல்லாத குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த  திருமாவளவன்...


மத்திய அரசு  எந்த அளவிற்கு தமிழக ஆட்சியாளர்கள் மீதும் ஆளும் கட்சியினர்  மீதும்  காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்கிறது என்பதற்கான சான்று. பணம் கொடுத்தவர் வாங்கியவர்  யார் என்பது குறித்து இது வரை புலனாய்வு செய்யவில்லை. ஆனால் ஆளும் கட்சியினரை பழிவாங்க வேண்டும். அவர்களை தனது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அச்சுறுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் அது ஜோடிக்கப்பட்ட புனையப்பட்ட வழக்கு என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. என்றார். 

0 comments: