Sunday, June 02, 2019

On Sunday, June 02, 2019 by Tamilnewstv   
திருச்சி புற்றுநோயை வென்றவர்கள் அவர்களுக்கான மறுவாழ்வு தினம் இன்று கொண்டாடப்பட்டது
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை புற்று நோய் மறுவாழ்வு தினமாக கொண்டாடப்படுகிறது இதன் நோக்கம் புற்றுநோய் வந்த பின்பும் வாழ்க்கை இருக்கிறது என்று புற்று நோயை வெல்ல முடியும் என்பதையும் இவ்வுலகிற்கு பறைசாற்றுவதாகும் உலகம் முழுவதும் தோராயமாக 32 மில்லியன் புற்றுநோயாளிகள் நோயை வென்று மறுவாழ்வு பெற்று இவ்வுலகில் வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

 இந்த சமுதாயம் அவர்களை நினைவுகூர்ந்து மீண்டும் நமது சமுதாயத்திற்கு ஒரு அங்கத்தினராக அவர்களை ஏற்றுக் கொள்ளும் விதமாக இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது 26 நவம்பர் 2004 லான்செட் என்ற மருத்துவ மனை மருத்துவ இதழில் வெளியிடப்பட்டு தகவலின்படி இந்தியாவில் புற்று நோய் குணமடையும் சதவீதம் மற்ற நாடுகளை ஒப்பிடும் பொழுது 50 சதவீதம் குறைவாகவே உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது இதன் முக்கிய காரணமாக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மற்றும் தொடர் சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால் ஆகும்
இந்நிலையில் மாறவேண்டுமானால் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு நமது சமுதாயத்தை மிகவும் அவசியமாகிறது புற்றுநோய் வந்தால் குணப்படுத்த முடியும் என்று புற்று நோய் வந்தவர்களும் உண்டு என்பதை சொல்லும் விதமாக அமைந்திருக்கும் இந்த நாளை தீபாவளி பொங்கல் போன்ற விழாவாகக் கொண்டாடப்படுகிறது
இந்நிகழ்ச்சியில் செந்தில்குமார் மருத்துவர் வரவேற்புரையாற்றினார் மருத்துவர் ஜெயபால்  மருத்துவர் அருண் சேஷாசலம்சிறப்புரை ஆற்றினார் அஷ்ரப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மருத்துவர் பாலாஜி நன்றி உரையாற்றினார்

0 comments: