Monday, April 06, 2020

On Monday, April 06, 2020 by Tamilnewstv in    
*விவசாயிகளுக்கு  நிவாரணதொகை வழங்க கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அவர்கள் மாண்புமிகு. பாரத பிரதமருக்கும்,  மாண்புமிகு. தமிழக முதல்வருக்கும் மனு*


     மக்களின் உயிர்கொல்லிநோயான காலரா, சின்னமை, பெரியம்மை நோய் வராமல் தடுப்பதற்கு இயற்கையாக நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்துகொடுத்த விவசாயிகள்,  இன்று கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஊரடங்கு உத்தரவினால்  அடைகின்ற  துன்பத்திற்கு அளவில்லாமல் சென்றுவிட்டது. நாங்கள் கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து சரியான மழை இல்லாமல் தண்ணீர் இல்லாததால், வறட்சியின் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக சரியாக சாகுபடி செய்ய முடியாமல்,  இந்த ஆண்டுதான் விளைச்சளிலும் குலைநோய் தாக்கி சாகுபடி செய்து நெல் விளைச்சல்கண்டோம்.  அவ்வாறு விளைந்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டுசென்று போட்டால் 25 நாட்கள் கழித்துதான் எடை போட்டு எடுத்துக்கொண்டார்கள். அவ்வாறு எடுத்த நெல்லிற்கு 40கிலோவிற்கு ரூ.50/- பெற்றுகொண்டுதான் எடுத்துக்கொண்டார்கள். தர்பூசணி, முலாம் வாழை,  திராட்சை  போன்ற பழப்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் நிலத்தில் பழுத்து அழுவி வீணாகிறது. மலர்கள் மல்லிகை,  ரோஜா, செவ்வந்தி, செம்மங்கி மற்றும்  காய்கறிகள் கேரட், கொடை மிளகாய், பச்சைமிளகாய், வாழை இலை, மரவள்ளிகிழங்கு      போன்றவையும் செடியில் இருந்து பறிக்காமல் வாடி வீணாகிறது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க அணியும் முககவசம் தயாரிக்க பருத்தி அவசியம், ஆனால் அந்த பருத்தியை  விவசாயிகளிடம் பாதி விலைக்குகூட  கொள்முதல் செய்ய மாட்டேங்கறங்க. அதுபோல் பால் உற்பத்தி செய்பவர்கள் பாலினை டீ கடை,  ஹோட்டல் இல்லாததால்  விற்பனை செய்ய முடியாமல் வீணாகி வீதியில் கொட்டும் நிலைமை ஏற்படுகிறது.  எலுமிச்சை பழம் கொரோனா நோய்க்கு  உகந்தது என்கிறார்கள் ஆனால் இலட்சகணக்கான எலுமிச்சையை பறித்து  விற்க முடியாமல் அங்கும், இங்கும் விவசாயிகள் அழைக்கின்றனர். மாட்டுக்கு வைக்கோல் ஏற்றினால் காவல்துறை பிடிக்கிறது,  அறுவடை இயந்திரம் அறுவடைசெய்ய  அளவுகடந்த வாடகை கேற்கின்றனர். சாப்பாட்டு இலை  ஹோட்டலும்,  விஷேசங்களுக்கும்  இல்லாததால் வயலிலே காய்கின்றது.  எல்லாருக்கும் உதவுகின்ற அரசு ஊருக்கே உணவு படைக்கின்ற விவசாயிகளுக்கு உதவவேண்டியது அரசின் கடமை. புதுச்சேரி அரசாங்கம் கூட விவசாயிகளுக்கு முதல் தவணையாக ஏக்கருக்கு ரூ. 5000/- கொடுக்கின்றனர். தமிழக அரசு விவசாயிகளை கொரோனா  கோரபிடியிலிருந்து அழிந்துவிட்ட விவசாய சமுதாயத்தை காப்பதற்கு ஏக்கருக்கு ரூ. 20000/- கொடுக்க வேண்டும். அவ்வாறு  கொடுத்தால்தான் விவசாயிகள் வாழமுடியும். கொரோனா தாக்கத்தைவிட, 10 மடங்கு வறட்சியால் விவசாயிகள் இறப்பதற்கு வழியிருக்கிறது. கடன் வாங்கி வாழை சாகுபடி செய்த திருச்சிமாவட்டத்தை  சேர்ந்த விவசாயி வாழை அழிந்துவிட்டதால் தற்கொலை செய்து சமீபத்தில் இறந்தார். இதுபோன்று விவசாயிகள்  தற்கொலை செய்யும் நிலையிலிருந்து காப்பாற்றி, தமிழக அரசு  ஏக்கருக்கு ரூ. 20000/- நஷ்டயிடு வழங்க வேண்டும். கொரோனா-வால் 10பேர் இறந்தால் வறுமையின் காரணமாக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் 100க்கனகாண விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறப்பதற்கு வழிவகுத்துவிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். எல்லாருக்கும் வாரிவழங்கும் மத்திய,  மாநில அரசு பேரிடர் நிவாரணநிதியிலிருந்து தமிழக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 20000/- வழங்க வேண்டும் என்று மாண்புமிகு. பாரத பிரதமர் அவர்களையும்,  மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்களையும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பாக வேண்டிகேட்டுக்கொள்கிறோம். மேலும்,  எங்கள் சாவிலிருந்து எங்களை காக்க கொரோனா 144 தடை உத்தரவின்போது விவசாயிகளை போராடுவதற்கு வழிவகுத்துவிடாதீர்கள் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு *தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு BABL* கூறியுள்ளார்.
     

0 comments: