Monday, May 04, 2020

On Monday, May 04, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே
அரசு பள்ளியில் பயில்வோரின் குடும்பத்தினருக்கு உதவிய ஆசியர்கள்.
அனைவரும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய ஆசிரியர்கள்.

கொரோனா அச்சத்தால் நாடே முடங்கிக் கிடக்க ஊரடங்கால் மக்களும் வீடுகளுக்குள் தான் கடந்த 40 நாட்களாக முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலை மே 17 ம் தேதி வரை நீடிக்கும் நிலையில் பள்ளி – கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

இருப்பினும் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூர் அருகே உள்ள சமுத்திரம் உயர்நிலைப்பள்ளி என்பது மிகவும் பின்தங்கிய பகுதியில் அமைந்துள்ளது. அந்த பள்ளியில் சுமார் 244 மாணவ, மாணவிகள் படித்து வந்தாலும் கூட அனைவரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகள் தான். இந்நிலையில் கொரோனா முடக்கத்தால் நம் பள்ளி மாணவ, மாணவிகளின் குடும்பத்தின் நிலை என்ன ஆனதோ என்று ஏங்கிய அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் உதவிட முடிவு செய்தனர்.
அதன்படி மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள 200 மாணவ, மாணவிகளின் குடும்பத்தினரை கண்டறிந்து அவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்தனர். அந்த டோக்கனில் எந்த நேரத்தில் வந்து பொருட்கள் வாங்கிச் செல்ல வேண்டும் என்ற விபரம் அடங்கி இருந்தது. அதன்படி 1 முதல் 50 வரை என மொத்தம் 4 பிரிவுகளாக டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி பொருட்கள் வாங்க வந்த மாணவ, மாணவிகள் பெற்றோர் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும் வட்டமிடப்பட்டிருந்தது. அந்த வரிசையில் பெற்றோர் வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். ஒரு குடும்பத்தினருக்கு 5 கிலோ அரிசி ஒரு பையிலும், மற்றொரு பையில் மளிகை பொருட்கள், காய்கனிகள், பிஸ்கட் உள்ளிட்டவை என மொத்தம் 2 பைகளின் பொருட்கள் தனித் தனியாக வழங்கப்பட்டது.
பள்ளியில் உள்ள 10 ஆசிரியர்கள் தலா 8 ஆயிரம் வீதம் 80 ஆயிரமும் சில நன்கொடையாளர்கள் மூலம் என மொத்தம் ஒரு லட்சம் மதிப்பீட்டில் மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு பொருட்கள் வழங்கப்பட்டது.

0 comments: