Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by TAMIL NEWS TV in ,    




ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

ரகசிய தகவல்

பான்பராக், குட்கா மற்றும் பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. எனவே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் அவைகள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

திடீர் சோதனை

இதனைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கருணாநிதி தலைமையில், உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் முத்து கிருஷ்ணன், பூபாலன் ஆகியோர் ஈரோடு பஸ் நிலையம் மற்றும் கொங்காலம்மன் கோவில் பகுதிகளில் உள்ள 80 கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் பல கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ரூ.30 ஆயிரம்

இதனைத்தொடர்ந்து அவற்றினை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கருணாநிதி கூறுகையில், ‘தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் களை யாரும் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,‘ என்றார்.

0 comments: