Thursday, August 14, 2014
நாட்டின் சவால்களை எதிர்கொள்ள இளைய தலைமுறை எழுச்சி பெறவேண்டும் என்று சென்னிமலை ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.
லட்சியம் வேண்டும்
சென்னிமலையில் உள்ள ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஒரு மரக்கன்றினை வழங்கி, ‘‘அறிவு அற்றம் காக்கும்’’ என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
பூமிக்கு கீழே பூமிக்கு மேலே உள்ள எந்த ஒரு சக்தியைவிட மன எழுச்சி கொண்ட இளைஞன்தான் மிகப்பெரிய சக்தி. இந்தியா 60 கோடி இளைஞர்களை பெற்ற நாடு. எனவே மக்கள்தொகை இந்தியாவுக்கு மிகப்பெரிய சொத்து ஆகும்.
ஒவ்வொரு இளைஞரின் வாழ்க்கையிலும் லட்சியம் வேண்டும். அந்த லட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும். தொடர்ந்து அறிவை பெற அதை தேடிச் செல்லுங்கள். தோல்வி மனப்பான்மையை தோல்வி அடைய செய்ய வேண்டும். இந்த 4 குணங்களும் இருந்தால் கனவு நனவாகும். கற்றல் கற்பனை சக்தியை வளர்க்கிறது. கற்பனை சக்தி சிந்திக்கும் திறனை தூண்டுகிறது.
கனவு காணுங்கள்
சிந்தனை திறன் அறிவை வளர்க்கிறது. அறிவு நம்மை மகானாக ஆக்குகிறது. கற்பனை சக்தியை உருவாக்குவதற்கு குடும்ப சூழ்நிலையும், பள்ளி சூழ்நிலையும்தான் முக்கிய காரணங்களாக அமையும். அந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கு ஒவ்வொருவரின் மனதிலும் தூய்மை வேண்டும். வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றமாகும்.
இளைஞர்கள் தோல்வி மனப்பான்மை, தவறான செய்திகள், ஊழல் சிந்தனை மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு தங்களது லட்சியம் வெற்றி பெற கனவு காண வேண்டும். அப்படிப்பட்ட கனவை ஒவ்வொரு இளைஞர்களின் மனதில் விதைக்க வேண்டும்.
நமது எண்ணங்கள் உயர்வாக இருந்தால் அரும்பெரும் லட்சியங்கள் தோன்றும். பெரும் லட்சியங்கள் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம் உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.
எழுச்சி பெறுக!
நாட்டின் சவால்களை எதிர்கொள்ள இளைய தலைமுறை எழுச்சி பெற வேண்டும். மாணவ, மாணவிகளின் ஆராய்ச்சி மற்றும் சிந்தனை வளர்க்கும் திறனை கல்வி நிறுவனங்கள் தூண்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், அரசு தொழில்நுட்ப கல்வி இயக்கக கூடுதல் இயக்குனர் சுந்தரமூர்த்தி, ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் மக்கள் ஜி.ராஜன், கல்லூரி முதல்வர் வஜ்ரவேல், சோபனா ராஜன், தொழில் அதிபர் சாந்தி துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்காகவும் அமராவதி அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர் மு....
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
The 10 th mid-year Chemical Research Society of India (CRSI) Symposium in Chemistry was jointly organized by National Ins...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
கர்நாடக உயர் நீதிமன்றம்| கோப்புப் படம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1991-96 காலக்கட்டத்தில் ஹைதராபாத் திராட்சை தோட்டம் மூலம...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
பாரத மாதாவின் பாதமாக இருப்பது தமிழ் மொழிதான் என தமிழறிஞர் தமிழண்ணல் கூறினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ச...
0 comments:
Post a Comment