Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by TAMIL NEWS TV in ,    


சுதந்திர தின விழா

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (வெள்ளிக் கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோட்டிலும் சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெறுகிறது.

விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழும், சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சிகளும், பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

ஒத்திகை

இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நேற்று காலை ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தொடங்கியது. இதில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடம், வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடம், கலைமகள் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடம், சித்தோடு அரசு மேல்நிலைப்பள்ளிக் கூடம், பவானி அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடம், திண்டல் பி.வி.பி. பள்ளிக்கூடம், ரங்கம்பாளையம் கொங்கு பள்ளிக் கூடம், திண்டல் வேளாளர் மெட்ரிக் பள்ளிக்கூடம், இந்தியன் பப்ளிக் பள்ளிக்கூடம், கிறிஸ்து ஜோதி மெட்ரிக் பள்ளிக்கூடம் ஆகிய பள்ளிக்கூடங்களை சேர்ந்த 1,535 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு நடன கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை செய்தனர். இந்த கலை நிகழ்ச்சி ஒத்திகையை ஈரோடு ஆர்.டி.ஓ. குணசேகரன், மண்டல துணை தாசில்தார் ஜெயக் குமார், வருவாய் ஆய்வாளர் சங்கர் கணேஷ், மாவட்ட கல்வி ஆய்வாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி கீதா ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

0 comments: