Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by TAMIL NEWS TV in ,    
சத்தியமங்கலத்தில் பிள்ளையார் உருவத்தில் அதிசய முள்ளங்கி


சத்தியமங்கலம் எஸ்.ஆர். டி. கார்னர் பகுதியில் காய்கறி நடத்தி வருபவர் சாமி. இவர் தினமும் மேட்டுப்பாளையம் சென்று காய்கறிகளை வாங்கி வந்து தன் கடையில் விற்பனை செய்து வருகிறார்.
அவரது கடைக்கு காய்கறி வாங்க வந்த ஒரு பெண் சிகப்பு கலர் கொண்ட முள்ளங்கியை வாங்கினார். அதில் ஒரு முள்ளங்கியை பார்த்ததும் அந்த பெண் ஆச்சரியம் அடைந்தார். அந்த முள்ளங்கி பிள்ளையார் தோற்றத்தில் இருந்ததே அவரது ஆச்சரியத்துக்கு காரணம்.
முள்ளங்கியை கடைக்காரர் சாமியிடம் காட்ட அவரும் பார்த்து வியந்தார். இதுபற்றி கேள்விப்பட்ட அங்கு வந்த அனைவரும் அதிசய முள்ளங்கியை பார்த்து சென்றனர்.
சிலர் விநாயகர் உருவில் இருந்த அந்த முள்ளங்கிக்கு சந்தனம் பூசி, குங்குமம் வைத்து வழிபட்டனர். ஏராளமான பொதுமக்கள் அந்த முள்ளங்கியை பார்த்து சென்றனர்.
அந்த பகுதியே பக்தி பரவசமாக காணப்பட்டது.

0 comments: