Friday, June 05, 2020

On Friday, June 05, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜூன் 05

திருச்சியில் மீண்டும் வாழ்வாதாரத்தை துவக்கியுள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்யை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

 கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, எடுக்கப்படும் நடவடிக்கைகளால், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 


 ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதித்துள்ள நிலையில் மீண்டும் துவங்கியுள்ள அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் திருச்சி, காந்தி மார்க்கெட், பழைய பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில், கிழக்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, மலைக்கோட்டை, பாலக்கரை, மற்றும் மாநகர பகுதியில் ஆட்டோக்களை இயக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள்  தொகுப்பினை, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

ஆட்டோ ஓட்டுனர்களின் சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்ட நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டு, பொருட்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக, ஓட்டுனர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி,  முகக்கவசம் வழங்கப்பட்டு, சமூக இடைவெளி, உடல் மற்றும் சுற்றுப்புறத்தூய்மை குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அமைச்சர் வெல்லமண்டி நடராஐன் அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக பகுதி கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

0 comments: