Monday, February 22, 2021

On Monday, February 22, 2021 by Tamilnewstv   

 அரியவகை சிறுநீரக புற்றுநோய் கட்டியை கண்டறிந்து சிக்கலான அறுவை சிகிச்சையை திறம்பட கையாண்ட அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள்


பல்வேறு உடல் உபாதைகள் மற்றும் சிக்கல்களை ஆண்டு மருத்துவப்பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம்

திருச்சி,  ஒரு 54 வயது பெண் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையின் புற நோயாளிகள் அறைக்குள் கையில் தனது ஹெல்த் செக்-அப் செய்த பைலுடன் ஒரு மலர்ந்த புன்னகையுடன் நுழைந்தார். அதில் அவருக்கு அபாயகரமான மற்றும் ஒரு அரிய வகை சிறுநீரக புற்றுநோய் இருப்பது தெரியாமலே அப்பாவியாக நின்றிருந்தார். அவருக்கு ஒரு டென்னிஸ் பந்தின் அளவு சிறுநீரகத்தில் ஒரு புற்று நோய் கட்டி எந்த அறிகுறிகளும்,தொந்தரவும் இல்லாமல் இருந்தது.


எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல, இந்த புற்று நோய் கட்டி உடலின் மிகப்பெரிய ரத்தநாளமான(நரம்பு) “இன்பிரியர் வேனா காவா (IVC)” –வில் சென்று மேல் நோக்கி பரவி இதயத்தையும் சென்றடைந்து விடும். இந்த கட்டி ஐ.வி.சி., நரம்பு மற்றும் வலது ஏட்ரியம் வரை சென்றிருந்ததால் இதயம் மற்றும் மூளைக்கு ஒரு அச்சுறுத்தலாக இருந்து நோயாளியின் நிலை கிட்டத்தட்ட ஒரு வெடிக்கப்போகும் டைம் பாம்ப் போல இருந்தது என்று சிறுநீரக மருத்துவர் கூறுகிறார்.


அதிர்ஷ்டவசமாக பெட் ஸ்கேன் பண்ணியதில் புற்றுநோய் உடலின் வேறு இடங்களில் (மெட்டாஸ்டாஸிஸ்) பரவவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. "அந்த அச்சுறுத்தல் அதாவது மெட்டாஸ்டாஸிஸ் இல்லை என்று உறுதியானதால் இந்த நோயை குணப்படுத்தும் வாய்ப்பு அதிகமாக இருந்தது” என்று டாக்டர் அழகப்பன் சொக்கலிங்கம் கூறினார்.

இந்த குழுவில் சிறுநீரக மருத்துவர் நந்தகுமார், மயக்க மருந்து நிபுணர்கள் சரவணன், கார்த்திக்,அழகப்பன் மற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர், குடல் அறுவை சிகிச்சை நிபுணர், வாஸ்குலர் சர்ஜன், இருதயநோய் நிபுணர் ஆகியோர் அடங்குவர். இந்த ஒத்திசைவான குழு, அவர்களின் ஒருங்கிணைந்த நிபுணத்துவம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் அதிநவீன வசதிகள் ஆகியவை இதை எல்லைகளுக்கு அப்பால் சாத்தியமாக்கியதாக இந்த டாக்டர்களின் அணியின் தலைவர் அழகப்பன் சொக்கலிங்கம் கூறுகிறார்.

பொதுவாக இந்த த்ரோம்பஸ் கட்டியானது உதரவிதானத்தை (diaphragm) தாண்டி மேல் நோக்கி பரவியிருக்கும் பட்சத்தில் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் உதவி தேவைப்படும். “சில நேரங்களில் நாங்கள் நோயாளியை பைபாஸில் வைக்க வேண்டியிருக்கிறது. சில சமயங்களில், கட்டியை அகற்ற இதயத்தை கூட திறக்க வேண்டியிருக்கும்” என்று டாக்டர் ஸ்ரீகாந்த் கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில் இந்த இரண்டும் தவிர்க்கப்பட்டு இந்த அறுவை சிகிச்சை குறைந்த பாதிப்பில் செய்யப்பட்டது. இதனால் எதிர்பார்த்த பலன்களையும் அடைய முடிந்தது என்றார்.


அறிகுறிகளே இல்லாமல் ஒரு ஹெல்த் செக்-அப் செய்யப்பட்டதில் தான் இந்த பூதாகரமான பிரச்சனை வெளியே தெரிய வந்தது துரதிருஷ்டத்தில் ஒரு பெரிய அதிர்ஷ்டமாகும். மேலும் 80 சதவீதத்திற்கும் அதிகமான சிறுநீரக புற்று நோய் கட்டிகள் பிற நோய்களுக்கு செய்யப்படும் சோதனைகளால் தற்செயலாக கண்டறியப்படுகிறது என்பது தான் உண்மை. இது ஹெல்த் செக்-அப் செய்வதின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. இதுபோன்ற குணப்படுத்தக்கூடிய நிலைமைகளை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் முக்கியமானது.அப்படி கண்டறியும் போது சிறுநீரகத்தை முழுவதும் எடுக்காமல் அந்த அக்கட்டிகளை மட்டும் எடுக்கும் லாப்ரஸ்கோபிக் சிகிச்சை முறைகளும் தற்போது இருக்கிறது.இது போன்ற சிகிச்சைகள் திருச்சி அப்பல்லோ மருத்துமனையில் செய்யப்படுகிறது என்று மருத்துவமனையின் மூத்த சிறுநீரக மருத்துவர் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அழகப்பன் கூறுகிறார்.

பல்வேறு உடல் உபாதைகள் மற்றும் சிக்கல்களை ஆண்டு மருத்துவப்பரிசோதனை செய்வதன் கண்டறியலாம் மற்றும் ஆண்டு மருத்துவ பரிசோதனைகளை வழங்குவதில் அப்போலோ மருத்துவமனை ஒரு முன்னோடி எனவும் இச்சிக்கலான அறுவைசிகிச்சையை செய்த மருத்துவ குழுவினரை மண்டல அதிகாரி ரோகினி ஸ்ரீதர் பாராட்டினார். திருச்சி அப்போலோ மருத்துவமனை, முதுநிலை பொதுமேலாளர் மற்றும் மருத்துவமனை தலைவர் சாமுவேல்,மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி மரு. சிவம் மருத்துவமனை, விற்பனை பிரிவு பொதுமேலாளர் மணிகண்டன் மற்றும் சங்கீத் துணை பொது மேலாளர் உடனிருந்தனர்.



-- 

0 comments: