Tuesday, July 22, 2014
உடுமலை, 22 : பிரதான கால்வாய் பாசனம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதை கண்டித்து மடத்துக்குளத்தில் நாளை நடைபெற உள்ள அனைத்து கட்சி போராட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து பெறப்படும் நீரைக்கொண்டு திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது.ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆற்று வழியாகவும், ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மழை போதிய அளவு பெய்யாததாலும், அடிக்கடி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதாலும் பிரதான கால்வாய் பாசனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அணையில் ஓரளவு தண்ணீர் இருப்பதால் தென்னைகளை காக்கவும், கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்கவும் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி மடத்துக்குளம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்துசாமியிடம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் அந்த மனு கிடப்பில் போடப்பட்டது.
பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து மடத்துக்குளம் நால்ரோட்டில் நாளை (23ம் தேதி) போராட்டம் நடைபெற உள்ளதாக அனைத்து கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் தரவு தெரிவித்துள்ளன.
இதில் விவசாயிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அனைத்து கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
0 comments:
Post a Comment