Monday, July 21, 2014
மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப காலி பணியிடங்களை நிரப்ப வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநாடு கோரிக்கை
திருப்பூர், ஜூலை23-
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்கி, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநாடு கோரியுள்ளது.திருப்பூரில் ஞாயிறன்று எப்.எம்.குத்புதீன் அரங்கத்தில் (ஹார்வி குமாரசாமி கல்யாண மண்டபம்) வருவாய்த்துறை அலுவலர் சங்க பொன்விழா ஆண்டு மாவட்ட மாநாடு நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.சைபுதீன் தலைமை தாங்கினார். மத்திய செயற்குழு உறுப்பினர் ச.முருகதாஸ் வரவேற்றார். முன்னாள் மாநில அமைப்புச் செயலாளர் வி.டி.சுப்பிரமணியன் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். இதில் மாவட்டச் செயலாளர் ஜி.விஜயன் வேலை அறிக்கை முன்வைத்தார். மாவட்டப் பொருளாளர் எம்.கண்ணன் வரவு செலவு அறிக்கை முன்வைத்தார். இதன் மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது.
இதையடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வருவாய்த்துறை அலுவலர்களுக்கு 30 சதவிகிதம் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு இரவு காவலர், துப்புரவுப் பணியாளர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகப் பிரிவிற்கு பயனாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்கள் வழங்குவதுடன், தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும், மாவட்ட மாறுதல் கோரியுள்ள விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இரவு பகல் பாராது கடுமையாக தேர்தல் பணியாற்றிய வருவாய்த்துறை அலுவலர்களுக்கு இரண்டு மாத அடிப்படை ஊதியம் மற்றும் இதர படிகளை வழங்க வேண்டும், திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்திற்கு கட்டட வசதி செய்து தர வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு அனைவருக்கும் பயனளிப்பு ஓய்வூதியம் வழங்கும் நடைமுறையை தொடர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்தியது.
இம்மாநாட்டில், மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் த.பாரிவேல் ஆகியோர் பங்கேற்று, பணி ஓய்வு பெற்ற அலுவலர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்தனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.லோகநாதன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் து.ராஜகோபாலன், கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கு.குமரேசன், மாநிலப் பொதுச் செயலாளர் த.சிவஜோதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிறைவாக மாவட்ட இணைச் செயலாளர் அ.குமாரவேல் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
0 comments:
Post a Comment