Friday, August 15, 2014
தாராபுரத்தில் ஏலம் எடுத்து பல மாதங்களாகியும் முன்வைப்பு தொகை செலுத்தாததால்ஏழு கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி பொது ஏலம் நடத்தப்பட்டது.
மொத்தம் உள்ள 217 கடைகளில், 137 கடைகளுக்கு மட்டும் ஏலம் நடந்தது. ஏற்கனவே கடைகளை எடுத்து நடத்தி வந்தவர்கள் அதே கடைகளை அதிக வாடகைக்கு ஏலம் எடுத்தனர். ஒரு சில கடைகளை மட்டுமே புது வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். ஏல விதிப்படி ஒப்பந்ததாரர்கள் 9 மாத வாடகை தொகையை முன் வைப்பு தொகையாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
ஏலம் விடப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும், ஒப்பந்ததாரர்கள் முன் வைப்புத் தொகையை செலுத்தவில்லை. இது குறித்து ஆணையர் நடவடிக்கை மேற்கொண்ட போது ஒப்பந்ததாரர்கள் கால அவகாசம் கேட்டனர்.
கால அவகாசம் அளித்தும் முன்வைப்புத் தொகை செலுத்தப்படவில்லை. இதனையடுத்து நகராட்சி ஆணையர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன் வைப்புத் தொகை செலுத்தாத பேருந்து நிலையத்தில் 1, தினசரி மார்க்கெட் 3, திருப்பூர் சாலையில் 1, உடுமலை சாலையில் 2 என மொத்தம் 7 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...

0 comments:
Post a Comment