Saturday, September 13, 2014
சென்னை, செப்.13-
சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரேஷன் அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் 13-ந் தேதி இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பொது விநியோக திட்டத்தைச் செயல்படுத்தும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.
அப்பகுதியை சுற்றி உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும், தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தங்கசாலை சிதம்பரனார் சென்னை நடுநிலைப்பள்ளி, ராயபுரம் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பெரம்பூர் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அண்ணாநகர் சென்னை உயர்நிலைப்பள்ளி, அம்பத்தூர் சென்னை தொடக்கப்பள்ளி, வில்லிவாக்கம் சமுதாய நலக்கூடம், திருவொற்றியூர் நேரு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஆவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, போரூர் தி.நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, மைலாப்பூர் பி.எஸ். மேல்நிலைப்பள்ளி, பரங்கிமலை புனித மார்க்ஸ் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் ஊராட்சி மன்ற அலுவலகம், திருவஞ்சேரி சைதாப்பேட்டை பாய்ஸ் கிளப் வெங்கடாபுரம், ஆயிரம்விளக்கு சென்னை நடுநிலைப்பள்ளி, சேப்பாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடத்தப்படுகிறது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...

0 comments:
Post a Comment