Tuesday, November 18, 2014
கரூர் பஸ் நிலையத்தில் ஓடும் இலவச கழிப்பிட கழிவுநீர் நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயந்தி தலைமை வகித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிக்கை குறித்து வந்திருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.இதனடிப்படையில், இஸ்லாமிய உலமாக்கல் மற்றும் பணியாளர்கள் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில், கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகம் மூலம் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களுக்கு நல உதவிகள் வழங்கப்படாமல் உள்ளது. மேலும், உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் பதிவு போன்றவை பணிகளும் தாமதமாகி வருகின்றன. எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களின் மனுவில் தெரிவித்துள்ளனர். மாற்றுத்திறனாளி நாகராஜ் அளித்த மனுவில், தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள சாலையை தார் சாலையாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாலவிடுதி காவல் நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதேபோல், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ரத்தினம் தெருவில் உள்ள சாக்கடை கழிவு நீரை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரும், கரூர் பஸ் நிலைய வளாகத்தில் இலவச, கழிப்பிட கழிவு நீர் பஸ் நிலையம் மத்தியில் பரவி வருவதை தடுக்க வேண்டும், பஸ் நிலைய பயணிகள் நடைபாதை ஆக்ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மாலை நேரங்களில் பஸ்களில் அதிக கூட்டம் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுவது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட பகுதிகளில் துண்டிக்கப்பட்ட குடிநீர், இணைப்புகளுக்கு மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்கிட வேண்டும் எனவும் லோக்சத்தா கட்சியின் மாநில விவசாய அணிச் செயலாளர் அருணாசலம் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த மனுக்கள் மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அடிப்படை வசதிகள் மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் மனுக்கள் வழங்கப்பட்டன. |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
மதுரை கோவில்பாப்பாகுடி பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் சர்வோதய கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கோகோ போட்டி...
0 comments:
Post a Comment