Saturday, November 01, 2014
சுக்காளியூர் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் சிமெண்ட் தடுப்புகள் அப்புறப்படுத்தப்படுமா?வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
கரூர் சுக்காளியூர் பிரதான சாலையில் விபத்தை ஏற்படுத்தும் சிமெ ண்ட் சாலைத் தடுப்புகளை அப்புறப்படுத்த வேண்டு மென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் திருமாநிலையூரில் இருந்து சுக்காளியூர் வரை உள்ள பைபாஸ் சாலையில் நடுவே சிமென்ட் சாலைத் தடுப்புகள் சாலையை பிரிக் கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்க ளாக பெய்த மழையால் புதிய சுக்காளியூரில் மழை நீர் பெருக்கெடுத்தது. மழை நீர் சாலையில் தேங்கிய தால் அப்பகுதி மக்கள் சா லைத்தடுப்பை திருப்பி விட் டும் சில இடங்களில் அகற் றியும் நீர்வடிய செய்தனர்., தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் சாலைத்தடுப்புகள் நடுரோட்டில் குறுக் கும் நெடுக்குமாக கிடக்கின்றன. பகல் வேளையில் வாகன ஓட்டிகள் ஒருசிலர் சுதாரித்துக்கொண்டு வாகனங்களை ஓரமாக ஓட்டிச் செல்கின்றனர். இருந்தபோ திலும் டூவீலர் மற்றும் நான் கு சக்கர வாகனங்களில் வருபவர்களில் சிலர் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சிறு விபத்துகளில் சிக்கிவிடுகின்றனர். ஆனால், இரவில் இந்த இடத்தில் தெருவிளக்குகள் கிடையாது என்பதாலும், வளைவுகள் நிறைந்த பகுதியாக இருப்பதாலும், விழுந்து கிடக்கும் சாலைத் தடுப்புகள் தெரியாமலும் வாகனங்கள் அதிகளவில் விபத்துக்குள்ளாகின்றன. மேலும் 2 நாட்களாகியும் சம்மந்தப்பட்ட துறையினர் சாலை சிமென்ட் தடுப்புகளை அப்புறப்படுத்தி சரி செய்யாமல் உள்ளனர். நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக தாறுமாறாக கிடக்கும் இந்த சாலை சிª மன்ட் தடுப்புகளை ஒழுங்குபடுத்தி போக்குவரத்துக் குக்கு வழி செய்யவேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...
0 comments:
Post a Comment