Tuesday, January 13, 2015
திருவள்ளுவர், பாரதியாரின் சிறப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக உத்தரகாண்ட் மாநில பாரதீய ஜனதா எம்.பி. தருண்விஜய், திருவள்ளுவர் திருப்பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பிரசார பயணத்தை தொடங்கி உள்ளார்.
நேற்று மாலை மதுரை வந்த அவருக்கு பாரதியார் பணிபுரிந்த சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. இன்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:–
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தன் கருத்துக்கள் மூலம் கலாச்சாரத்தை உருவாக்கியவர் திருவள்ளுவர். அனைத்து மக்களும் சமமாக இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்று கூறியவர்.
தமிழ்நாட்டில் தான் கடவுளே குற்றம் செய்தாலும் அது குற்றமே என வாதாடிய தமிழ் புலவர் நக்கீரர் போன்றவர்கள் உருவாகி உள்ளனர். உலக அமைதிக்காக எப்படி ஐ.நா.சபை உருவாக்கப்பட்டதோ, அதே ரீதியில்தான் மனிதருக்குள் அமைதி, நல்வழிமுறைகளை வகுத்து மனிதகுலம் அமைதியாக வாழ என்ன வழி என்பதையும் திருவள்ளுவர் நமக்கு தந்துள்ளார்.
மகாத்மாகாந்தி கூட திருக்குறளை பற்றி அறிந்து தமிழ் கற்க ஆசைப்படுகிறேன் என்று கூறி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நிருபர்கள், நீங்கள் திடீரென தமிழ் மீது ஆர்வம் காட்டுவது ஏன்? என்று கேட்டனர். இதற்கு தருண்விஜய் எம்.பி. அளித்த பதில் வருமாறு:–
என் மாநிலத்தில் உள்ள இலக்கியம்தான் மேன்மையானது, பெருமைவாய்ந்தது என்றெல்லாம் ஆணவத்தோடு இருந்தேன். இப்போது தான் திருக்குறளின் மேன்மை எனக்கு தெரியவந்தது.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதியை எதிர்த்துள்ளார். எல்லா மனிதர்களும் பிறப்பு முதல் இறப்பு வரை சமம் என்று கூறியதோடு, அப்படிப்பட்ட சமுதாயத்தையும் உருவாக்கி உள்ளார். தமிழ் கலாச்சாரத்தின் வளம், தந்திரம், மேன்மை என தெரியவரும்போது தமிழ் என்னை ஈர்த்தது தவறில்லை.
தமிழகத்தில் தற்போது ஆங்கில மோகம் அதிகரித்துள்ளது. தமிழ் குழந்தைகள் செல்போன் நம்பரைக்கூட தமிழில் கூறமுடியவில்லை. ஆங்கிலத்தில்தான் சொல்கிறார்கள். தமிழை சரளமாக பேசமுடியாத நிலை இப்போது உள்ளது. இந்த சூழல் மாறவேண்டும். தமிழ் மொழியின் மேன்மையை நான் எப்படி உணர்ந்துள்ளேனோ, அது போல இங்குள்ள ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
திருக்குறளை தமிழில் கற்றுக்கொடுக்க எனது வீட்டில் ஒரு தமிழ்மொழி கற்பிக்கும் மையம் அமைத்திருக்கிறேன். இதற்கு தமிழ் ஆர்வலர்கள் உதவி செய்யலாம். திருவள்ளுவர்தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அப்போதே உருவாக்கி இருக்கிறார். சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும். இதற்கு ஜனாதிபதியை சந்தித்து பேசி இருக்கிறேன். எனது எண்ணத்தையும் சொல்லி இருக்கிறேன்.
ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாடு கிராமப்பகுதி விவசாயிகளின் விளையாட்டாகும். இந்த விளையாட்டின்போது கிராம விவசாயிகள் யாரும் மாடுகளை கொல்வதில்லை. இது கலாச்சார விளையாட்டு. பொழுதுபோக்கிற்காக இந்த விளையாட்டை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த விளையாட்டுக்கு நான் ஒத்துழைப்பு தெரிவிப்பேன். தமிழ் மனத்தில் ஒரு பகுதி ஜல்லிக்கட்டு ஆகும். இதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment