Wednesday, January 13, 2016
தூத்துக்குடி மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் 27வது சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு பைக் பேரணி இன்று நடைபெற்றது.
இருவக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டும். காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் ஊர்க்காவல் படையினர், போக்குவரத்து போலீசார் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலையம் முன்பு தொடங்கியது. பேரணியை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு ஏஎஸ்பி அருண் சக்திகுமார் தலைமை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் முன்னிலை வகித்தார். மாநகர போக்குவரத்து ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் முத்துபாண்டி, வேலாயுதம், நம்பிராஜன், வாகன ஆய்வாளர்கள் விநாயகம், சிவகுமார், பெலிக்ஸ் மாசிலாமணி, ஊர்க்காவல்படை தளபதி பாலமுருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்ற இப்பேரணி மீண்டும் தென்பாகம் காவல் நிலையத்தில நிறைவடைந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...

0 comments:
Post a Comment