Sunday, April 23, 2017
On Sunday, April 23, 2017 by Unknown in Tiruppur
திருப்பூர் சாமுண்டிபுரம்–வளையங்காடு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையை மூடக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 5–ந்தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அங்கு வந்த போலீஸ் அதிகாரிகளும், டாஸ்மாக் கடை அதிகாரிகளும் 15 நாட்களில் கடையை மூடுவதாக உறுதியளித்தனர். அதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் நேற்று வரை கடை செயல்பட்டுவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த கடையை மூடக்கோரி நேற்று மீண்டும் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசாரும், டாஸ்மாக் அதிகாரிகளும் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதற்கிடையே திருப்பூரில் உள்ள அனைத்து காட்சிகள் சார்பில் திருப்பூர் மாவட்ட உதவி கலெக்டர் ஷ்ரவன் குமாரை சந்தித்து கடையை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கக்கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடுத்த மாதம் 8–ந் முதல் டாஸ்மாக் கடை செயல்படாது என்று கூறினார். இந்த தகவலை அனைத்து கட்சி சார்பில் பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் பொதுமக்களிடம் வந்து கூறினார்.
சாலை மறியல்
ஆனால்,எங்களுக்கு உடனடியாக கடையை மூடவேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் எனக்கூறி வளையங்காடு–சாமுண்டிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸ் துணை கமிஷனர் திஷா மிட்டல் மற்றும் திருப்பூர் தெற்கு உதவி கமிஷனர் மணி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
திருச்சி பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம். திருச்சி...
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...

0 comments:
Post a Comment