Tuesday, December 26, 2017
திருச்சி டிகளத்தூர் தலைமுறைகளை கடந்து அரியவகை மூலிகைகளை பாதுகாக்கும் விவசாயி மோகன கிருஷ்ணன் எயிட்ஸை கட்டுப்படுத்தும் மூலிகையும் உண்டு என விளக்கம்
உலகில் நாளுக்கு நாள் உருவாகும் புதிய வகையான நோய்களுகள் என்று கருதகூடிய பல நோய்கள் பல தலைமுறைகளுக்கு முன்பு நம்முடைய முன்னோர்கள் அந்நோயால் பாதிக்கப்பட்டு அதற்க்கு உரிய மூலிகை மருந்துகளை கொண்டு தங்களை தாங்களே குணப்படுத்தி, அந்த மூலிகைகளையும் பாதுகாத்து வந்தனா்.
ஆனால் தற்போது பெருகி உள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளில் முக்கிய இடம் மருந்துகளுக்கு தான் அதிலும் தற்காலிகமாக ஒரு வலியை, ஒருநோயை கட்டுப்படுத்த கூடிய ஆங்கில மருந்துகள் மனிதனின் வாழ்நாளை குறைத்துவிட்டது என்றே கூறலாம் இயங்கையோடு, இயற்கை மூலிகைகளை கொண்டு வாழ்ந்த முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்துடன் பல நுறூ ஆண்டுகளை கடந்தும் வாழ்ந்தும் வந்துள்ளனா்.
இன்றை ஆங்கில மருத்துவத்திற்க்கு மத்தியிலும் தன்னுடைய தோட்டத்தில், வீட்டில் சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட அரியவகை மூலிகைகளை பாதுகாத்து வளா்த்து வரும் விவசாயி மோகனகிருஷ்ணனை நேரில் சந்தித்த போது….
திருச்சியிலிருந்து சுமார் 40 கிலோமீ தொலைவில் உள்ள எதுமலையடுத்த டிகளத்தூர் கிராமத்தில் வானம் பார்த்த பூமியில் ஆயிரகணக்கான மூலிகைகளை பாதுகாத்து வருகிறார். தமிழகத்தில் எங்கும் கிடைக்காத பல மூலிகைகள் இவரிடம் கிடைக்கும் என்றால் அது ஆச்சரியமாக தான் உள்ளது.
இதன் பராமரிப்பு பற்றி கூறுகையில் என்னிடம் எல்லா வகையான மூலிகைகளும் உள்ளது. அழிந்து கொண்டிருக்கும் மூலிகைகள், அழிந்துவிட்ட மூலிகைகள், என்று என்னுடைய முப்பாட்டன் காலத்தில் இருந்து இதனை நாங்கள் பராமரித்து வருகிறோம். அவா்கள் எல்லாம் வைத்தியா்களாக இருந்தார்கள். அவா்களுக்கு பின் நான் இந்த மூலிகைகளை வைத்து பராமரித்து வருகிறேன். தற்போது தண்ணீருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள பல மூலிகைகள் தண்ணீர் இல்லாமல் வளரக்கூடியது தான், இருந்தாலும் கொஞ்சம் தண்ணீர் இருந்தால் வெயிலிலும் பனியிலும் வாடாமல் நன்றாக வளரும், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தாவரவியல் பற்றி படிக்கும் மாணவா்கள் அதிகம் என்னிடம் தான் மூலிகைகளை ஆராய்ச்சிகாக கொண்டு செல்வார்கள். 300க்கும் மேற்பட்ட அழிந்து கொண்டிருக்கும் மூலிகைகளை நான் பராமரித்து வருகிறேன். தற்போது கிணற்றில் தண்ணீர் இல்லாததால் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் நிரப்பி அதனை ஊற்றி காப்பாற்ற வேண்டிய நிலை உள்ளது. கிணற்றை ஆழப்படுத்த மானியம் வழங்கினால் நான் இந்த மூலிகைகள் அழியாமல் பாதுகாக்க முடியும் என்று கூறுகிறார்.
தற்போது வெண் நாவல், மர மஞ்சள், அதிமதுரம், வெண் தூதுவளை, வெண் கொழிஞ்சி, சோழ வெங்கை(மரம்), தங்காயில்(மரம்), டிவிடிவி(மரம்), கும்பிலியம்(மரம்), உள்ளிட்ட பலவை தமிழகத்தில் கிடைப்பதில்லை, அவை அனைத்தும் நான் வைத்திருக்கிறேன். அதேபோன்று ஈஸ்வரமூலி(பெருமருந்து கொடி) எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் மூலிகை, நித்திகல்யாணி கேன்சரை குணப்படுத்தும் மூலிகை, சர்பகந்தா பாம்பு கடி மற்றும் விஷ கடிக்கு, ஒடுவன் தாவர பூச்சிகொல்லி ராசாயன பூச்சிகொல்லிகளை தெளிப்பதைவிட இதன் இலையை அரைத்து தெளித்தால் பூச்சிகள் இறந்துவிடும். இந்த இலையை மனிதா்கள் அறைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் போதும் அவா்கள் உடனடியாக இறந்துவிடுவார்கள். மேலும் மெல்லிபெரா என்று சொல்லகூடிய வேலி மரம் விவசாயிகளின் தோழன் என்றே சொல்லலாம் இதில் வேலி அமைத்தால் யானை கூட நிலத்திற்க்குள் நுழைய முடியாது. ஆஸ்துமா கொடி(நெஞ்சருப்பான்) – காசநோய்க்கு உகந்த மருந்து, வெள்ள அருகு – சளி, இருமலுக்கு சிறந்தது, வெள்ள எருக்கு சொறி சிறங்கு உள்ளிட்டவற்றிற்கு மிக சிறந்த மருந்து. தற்போது இதுபோன்ற சில முக்கிய மூலிகைகள் கிடைப்பதில்லை. எனவே தான் இந்த மூலிகைகளை பாதுகாக்கும் பணியை மட்டுமே செய்து வருகிறேன். இப்போது நான் இந்த பணியை செய்து வருகிறேன். ஆனால் எனக்கு பின்னால் இதை யார் செய்ய போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஏன் என்றால் இதில் பெரிதாக எந்தவித வருமானமும் இல்லை. அக்கம்பகத்தில் உள்ள விவசாயிகள் யாரும் பயிரிடுவதில்லை. ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்த்து அதனை விற்பதில் தான் தங்களுடைய முழு நேரத்தையும் செலவிடுகிறார்கள். மண்ணுக்கு இருந்த தேவை மாறி இன்று கறிக்கு தேவை அதிகமாகிவிட்டது. ஆடு, கோழியில் தான் நல்ல லாபம் கிடைக்கிறது என்று கூறுகிறார். மூலிகைகள் பாதுகாக்கபட வேண்டும் நல்ல உள்ளம் கொண்டவா்கள் யாராவது இருந்தால் எங்களுடைய கிணற்றை ஆழப்படுத்தி கொடுத்தால் போதும் தற்போது 13 மீட்டர் ஆழம் இருக்கு, அதை 30 மீட்டராக உயர்த்தி கொடுத்தால் போதும் தண்ணீர் தட்டுபாடு இல்லாமல் இருக்கும் இந்த மூலிகைகளையும் காப்பாற்ற முடியும் என்று கூறுகிறார். மூலிகைகளை காப்பாற்ற முன்வாருங்கள், எதிர்காலத்தில் நம்முடைய மூலிகைகளை கொண்டு இயற்கை மருத்துவத்திற்க்கு மாறுங்கள் என்று அறைகூவல் விடுகிறார் விவசாயி மோகன கிருஷ்ணன் .
பேட்டி ....மோகன கிருஷ்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
0 comments:
Post a Comment