Monday, February 22, 2021
திருச்சி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டியை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் துவக்கி வைத்தார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 73வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் சுற்றுலாத் துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் ஏற்பாட்டில் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி திருச்சியில் துவங்கியது. திருச்சி, மன்னார்புரம் பகுதியில் உள்ள ஐ டெஸ்டினி பேட்மிட்டன் அசோசியேஷன் வளாகத்தில் நடைபெற்ற பூப்பந்தாட்ட போட்டியை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் துவக்கி வைத்தார். முன்னதாக, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அவரது மகன் ஜவகர்லால் நேரு ஆகியோர் பூப்பந்தாட்டத்தை விளையாடி, வீரர் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர். இன்று துவங்கும் இப்போட்டிகள் வருகிற 28ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நடைபெறுகிறது. இதில் 11 வயதிற்குட்பட்டோர் முதல் முதியோர் (42 வயது) வரை என 12 பிரிவுகளில் ஆண் பெண் இருபாலருக்கும் ஆன போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களை தக்கவைப்பவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. முதல் நாளான இன்று 11, 13, 15 வயதிற்குட்பட்ட விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். போட்டி ஏற்பாடுகளை ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், முத்துக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.போட்டிக்கு நடுவர்களாக நாக செல்வம், நவீன் ஆகியோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...

0 comments:
Post a Comment