Saturday, March 07, 2020

On Saturday, March 07, 2020 by Tamilnewstv in    
தென்னிந்திய அளவிலான மாடலிங் போட்டி கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் 10 நாட்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.

இதில் தென்னிந்திய அளவில் இருந்து சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். இதில் திருச்சி திருவெறும்பூர் கக்கன் காலனியைச் சேர்ந்த அஜ்மீர் கான் (22) என்ற பொறியியல் பட்டதாரி கலந்து கொண்டார். மொத்தம் ஆறு சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. இதில் அதிக புள்ளிகளைப் பெற்று அஜ்மீர் கான் வெற்றி பெற்றார்.
திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று தனது வெற்றி குறித்து அஜ்மீர் கான் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் இந்த வெற்றியை சாதாரணமாக பெறவில்லை. மிகவும் கடின உழைப்புக்குப் பின்னர் வெற்றி பெற்றேன். எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. அவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். மிஸ்டர் இந்தியா பட்டம் வெல்வதே எனது இலக்காகும். உலக அளவில் இப்போட்டியில் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன். இதற்கு முன்பு மிஸ்டர் மதராசபட்டினம் போட்டியில் கலந்து கொண்டு சிறந்த இயற்கை  அலங்காரத்திற்கான பரிசைப் பெற்றேன். அதேபோல் தமிழக ஸ்டைல் ஐகான் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளேன். எனது வெற்றிக்கு ஃபேஷன் கோரியோகிராபர் பிரகாஷ் பிள்ளை மிகவும் பெரிய அளவில் உறுதுணையாக இருந்தார் என்றார்.
On Saturday, March 07, 2020 by Tamilnewstv in    
திருச்சி தேசியக் கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார்.


திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சுப்பிரமணியன் சுவாமி பதில் கூறுகையில், ஏப்ரல் 2ஆம் தேதி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப் படும். அனைத்து கட்டுமான பொருட்கள் தயாராக இருப்பதால், உடனடியாக அவற்றை கோர்க்கும் பணி தொடங்கும். இரண்டு ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் காசி விசுவநாதர் கோவில் பகுதியில் ஒரு பகுதி உடைக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டுள்ளது. அதையும் மாற்றுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக சன்னியாசிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நான் தலைவராக இருக்கிறேன். பாபர் மசூதியை நான் இடிக்கவில்லை. மக்களாக இணைந்து இடித்தார்கள். அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்றார். திமுக தேர்தல் வியூலத்திற்கு பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, சுப்பிரமணியசாமி பதில் கூறுகையில், பிரசாந்த் கிஷோர் யார் என்பது எனக்கு தெரியாது. ஒரு அரசியல் தலைவராக இருந்தால் எனக்கு தெரியும். ஆனால் இந்த தேர்தலில் திமுக தோற்க வேண்டும். அதற்கான முயற்சிகளை அனைவரும் இணைந்து மேற்கொள்வோம்
 என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் மாற்றம் ஏற்படும். அது குறித்த விபரத்தை தற்போது வெளியிட முடியாது. அவர் சமுதாய ரீதியாக வலுவாக உள்ளார் என்றார்.
 தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்துவது நல்ல விஷயம். அதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் கடல் நீரை குடிநீராக மாற்றி விட்டு ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை நிறைவேற்றலாம் என்றார்.

Friday, March 06, 2020

On Friday, March 06, 2020 by Tamilnewstv in    

On Friday, March 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி வைணவ திவ்ய ஸ்தலங்களில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் தெப்பத்திருவிழா


108 பந்தங்களுடன்.... ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் தெப்பத் திருநாள் ஸ்ரீநம்பெருமாள் பந்தக் காட்சியுடன் நிறைவு பெற்றது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழா
தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நிறைவடைந்தது பின்னர்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பதிருவிழா வரும் 5-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா வரும் 27-ந் தேதி தொடங்கி வருகிற 6ம் தேதி வரை நடைபெறும்.
தெப்பத்திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2ம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4ம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5ம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6ம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தெப்பத்திருவிழாவின் 7ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8ம் நாளான 5-ந்தேதி மாலை நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணியளவில்; நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து  சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
9ம் திருநாளான 6-ந் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது.

இதையொட்டி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன்,  ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில்  ஊழியர்கள் செய்திருந்தனர்


On Friday, March 06, 2020 by Tamilnewstv in    

On Friday, March 06, 2020 by Tamilnewstv in    
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.


திருச்சி அருகே நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் பிரான்சிஸ் அந்தோணிராஜ் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் சுந்தர்  ஈஸ்வர்  மாவட்டச் செயலாளர்  முரளிதரன் மற்றும் கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


 இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவையை தொடங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் கனவு திட்டமான தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட இரண்டாவது தலைநகரை உருவாக்கிட தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்.  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்ள படுகிறது. எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் இளைஞரணி சார்பில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள மத்திய தொழிற் பணிகளிலும், தமிழக அரசின் வேலைவாய்ப்பு களிலும் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 இந்த கூட்டத்தில் இளைஞர் அணி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

பேட்டி:
சமத்துவ மக்கள் கட்சி
மாநில இளைஞரணி செயலாளர்.

 பிரான்சிஸ் அந்தோணிராஜ்
On Friday, March 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி: 

ஒப்பந்த பணிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி திருச்சியில் ரயில்வே ஒப்பந்ததாரர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

                    
திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தெற்கு ரயில்வே அனைத்து கோட்ட மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஈகிள் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முத்துராமன், பொருளாளர் வெங்கடாசல பெருமாள் உட்பட ஏராளமான ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் குறித்து இதில் ஈகிள் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட திருச்சி, சேலம், மதுரை, சென்னை ஆகிய 4 கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 300 ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.  தற்போது 500 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளுக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. கடந்த ஆறு மாத காலமாக இந்த நிலுவைத் தொகையை வழங்காமல் ரயில்வே நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. 


ரயில்வேக்கு என்று தனி பட்ஜெட் இருந்தபோது ஒப்பந்த தொகை உடனடியாக வழங்கப்பட்டது. தற்போது பொது பட்ஜெட்டுடன் இணைந்த பிறகு நிலுவைத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இந்த வகையில் இந்தியா முழுவதும் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 

நாங்கள் இந்த போராட்டத்தை அறிவித்த பின்னரே பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். நிலுவைத் தொகையை வழங்க ஏற்பாடு செய்வதாகக் கூறி இருக்கிறார்கள். எனினும் உறுதியான உத்தரவாதம் அளிக்கப்பட வில்லை. அதனால் இந்த போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தத் தொகை நிலுவையில் இருப்பதால் பணியாளர்களுக்கு கூலி வழங்க முடியவில்லை. வங்கிகளில் கடன் திருப்பி செலுத்த முடியவில்லை. அதனால் தொழில் பாதித்துள்ள து என்றார். 
On Friday, March 06, 2020 by Tamilnewstv in    


திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது

. "யுகா" அமைப்பு நிர்வாகி அல்லிராணி
 மகப்பேறு நிபுணர்,
ராமகிருஷ்ணா மருத்துவமனை
  டாக்டர் ரமணி தேவி ,மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் மகப்பேறு நிபுணர்,
ராமகிருஷ்ணா மருத்துவமனை
  டாக்டர் ரமணி தேவி பேசுகையில்,


 கொரோனா வைரஸ் நோய் தற்போது ஈரான், இத்தாலி, சீனா, கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

 கடந்த மாதம் சீனாவில் இந்த நோயால் தினமும் 3,500 பேர் பாதிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. தற்போது இந்த எண்ணிக்கை 300 ஆக குறைந்துள்ளது.
இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் காரணம். இந்நோய்க்கான தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை முறைகளை கண்டுபிடிக்குமாறு மருத்துவர்களுக்கு தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  குழந்தைகள், முதியவர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், புற்றுநோய் போன்ற நோய்க்கு ஆளாகியவர்களை இந்த நோய் எளிதில் தாக்குகிறது. தற்போதைய சூழ்நிலையில் இதற்கு சிகிச்சை முறை, மருந்து எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பரவாமல் பாதுகாக்கும் நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனாவில் உள்ள மூலிகை மருந்துகளுக்கு நிகராக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் மருந்துகள் உள்ளது. குறிப்பாக கொரோனா நோயை தடுக்க கை கழுவும் முறையை சிறந்த தடுப்பு முறையாகும். நமது நாடு தூசிகள் நிறைந்த நாடு. அதனால் கை கழுவும் பழக்கத்தை வழக்கமாக மேற்கொள்ளவேண்டும்.


நம் கைகள் மூலம் மூக்கு வாய் போன்றவற்றை அடிக்கடி தொடக்கூடாது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிலவும் வெப்பநிலையில் கொரோனா நோய் பரவ வாய்ப்பு கிடையாது. 15 டிகிரி செல்சியஸ் இருந்தாலே கொரோனா கிருமி  அழிந்துவிடும். மூச்சுத் திணறல், உடல் வலி, தலைவலி, இருமல், சளி போன்றவை இந்நோய்க்கான அறிகுறியாகும். இத்தகைய அறிகுறி இருந்தாலே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று நோய் தாக்குதல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நோய் தாக்குதல் இருந்தால் உடனடியாக அதிகப்படியான மூச்சுத்திணறல் ஏற்படும். நுரையீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்து உயிர் இழப்பை சந்திக்க நேரிடும். 100 பேருக்கு இந்நோய் இருந்தால் 2 சதவீதத்துக்கும் குறைவானவர்களே இறப்புகளை சந்திக்கின்றனர்.
 52% பேர் குறைந்த அளவிலான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். 15 சதவீதம் பேர் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றனர். 3 சதவீதம் பேர் மட்டுமே சிக்கலுக்கு ஆளாகின்றனர்.


மக்கள் அதிகம் கூடும் பகுதிக்கு செல்வதை தவிர்த்து தனிமையில் இருக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்களுக்கு இத்தகைய நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு கை கழுவுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பேட்டி: மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ்

Thursday, March 05, 2020

On Thursday, March 05, 2020 by Tamilnewstv in    
திருச்சி பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் என்றழைக்கப்படும்

ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்

ரெங்கநாதர்  கோயிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா வரும் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.  தெப்பத்திருவிழாவின் 7ம் நாளான இன்று மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்திருவீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8ம் நாளான அன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி நாளை மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து


மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார்.  இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 9ம் திருநாளான 6ம் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். மேலும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில்நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.