Monday, June 15, 2020
On Monday, June 15, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஜூன் 15
வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம்
அழைத்து வர வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் இணையவழி போராட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம் திரும்பி அழைத்து வர வலியுறுத்தி வலியுறுத்தி
மாநில பேச்சாளர் ரஹமத்துல்லா தலைமையில்
இணையவழி
போராட்டம் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஹமத்துல்லா கூறியதாவது
கொரனா வைரஸ் காரணமாக ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டில் வாழும் தமிழர்களை திரும்பி வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழக மக்களை உடனடியாக மீட்க கோரியும் அதற்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தி நாங்கள் இந்த இணைய வழி போராட்டத்தை நடத்துகிறோம் என்று கூறினார்.
On Monday, June 15, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் கூட்டம் வராத நிலையில் அவை தொடர்ந்து இயக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் நேரமும் மாற்றப்பட்டுள்ளது
கடந்த 12-ஆம் தேதி முதல், தினமும் சூப்பர்ஃபாஸ்ட் இன்டர்சிட்டி சோழன் எக்ஸ்பிரஸ் காலை 6.30 மணிக்கும், பல்லவன் எக்ஸ்பிரஸ் காலை 7 மணிக்கும் திருச்சியிலிருந்து அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டு வரை இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் முறையே 14 மற்றும் 16 பெட்டிகள் உள்ள நிலையில் முதல் 2 பெட்டிகளில் மட்டும் நூற்றுக்கும் குறைவான பயணிகள் பயணிக்கின்றனர்.
மற்ற பெட்டிகள் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. பயணிகள் முகக் கவசம் அணியவும், உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு தனி நபர் இடைவெளியுடன் அமரவும் அறிவுறுத்தப்படும் நிலையில் பெரும்பாலானோர் இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் நாளை முதல் திருச்சி-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு - திருச்சி, கோவை-அரக்கோணம் இடையே 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு - திருச்சி இடையே இயக்கப்படும் ரயில் விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக செல்லும் இயங்கி வருகிறது.
இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மாலை 2 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு திருச்சி வந்து சேரும், பின்னர் திருச்சியில் இருந்து காலை 06.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.40 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.
இந்நிலையில், நாளை முதல் இந்த சிறப்பு ரயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு திருச்சி சென்று வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
On Monday, June 15, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்புக்கு திங்கள்கிழமை பிற்பகலுக்கு மேல்வந்து சேர்ந்தது. அதிகாலை வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமாக பிற்பகல் 2.15 மணிக்கு வந்து சேர்ந்தது.
மேலணைக்கு வந்த தண்ணீரை விவசாயிகள் மலர்கள் தூவியும், விதை நெல்களை தூவியும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பூஜைகள் செய்து காவிரியை வழிபட்டு டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை முழுவதுமாக காவிரியில் திறந்து அனுப்பினர்.
திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை டெல்டா மாவட்டங்களில், குறுவை மற்றும் சம்பா பருவ நெல் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
தண்ணீர் இருந்தால் தாளடியும் சேர்த்து மூன்று போகங்கள் சாகுபடி செய்யும் சூழல் இருந்தது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக குறுவைக்கு தண்ணீர் கிடைப்பது அரிதாகி விட்டது.
குறுவை பயிருக்கு மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும். அதிமுக அரசு பொறுப்பேற்றதும் 2011இல் ஜூன் 6ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன்மூலம், டெல்டா மாவட்டங்களில் 3.4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. இதன்பிறகு கடந்த 9 ஆண்டுகளாக போதுமான நீர் இருப்பு இல்லாததால் குறுவை பாசனத்திற்கு முறையாக தண்ணீர் திறக்கவில்லை. இதனால், நிலத்தடி நீராதாரங்களை கொண்டு ஒரு லட்சம் ஏக்கர் வரை மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கு 40 டி.எம்.சி. தண்ணீர் தேவை. இந்தாண்டு அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் மேலேயே தொடர்ந்து வந்ததால் திட்டமிட்டபடி ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மேட்டூருக்கு நேரில் வந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்தார். விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது நாமக்கல், கரூர் மாவட்டங்களை கடந்து திருச்சி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான முக்கொம்புக்கு திங்கள்கிழமை வந்து சேர்ந்தது.
கரூர் மாயனூர் கதவணைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்ததால், முக்கொம்புக்கு திங்கள்கிழமை காலை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பேட்டைவாய்த்தலைக்கே காலையில்தான் வந்து சேர்ந்தது. மணல் அள்ளியதால் மேடு, பள்ளங்கள் அதிகம் இருந்ததால் அவற்றை நிரப்பியபடி வந்து செல்ல தாமதமானது. பின்னர், தாமதமாக முக்கொம்பு மேலணைக்கு பிற்பகலில் வந்தது.
இதையடுத்து அங்கு திரண்டிருந்த விவசாயிகள் காவிரி ஆற்றில் மலர்களை தூவி தண்ணீரை வரவேற்றனர். சிறப்பு பூஜைகளும் நடத்தி காவிரித் தாயை வழிபட்டனர். இதேபோல பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களும் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு காவிரி தண்ணீரை வரவேற்றனர்.
பின்னர் முக்கொம்பு அணையில் உள்ள மதகுகள் வழியாக கல்லணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திங்கள்கிழமை இரவுக்குள் கல்லணையைச் சென்றடையும். அங்கிருந்து செவ்வாய்க்கிழமை காலை பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
முக்கொம்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி
ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது .
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட 20 ஊராட்சிகளை சேர்ந்த 200 தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. நிவாரண உதவியை அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ் வழங்கினார். துணைத்தலைவர் வனிதா சத்தியசீலன், அந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரியங்கா மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். நலத்திட்ட உதவிகளாக அரிசி, காய்கறி, வேட்டி, சேலை, உணவு ஆகியவை வழங்கப்பட்டது.
Sunday, June 14, 2020
On Sunday, June 14, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*சொத்து தகராறில் தென்னை மரங்களை வெட்டி கடத்திய விஹெச்பி மாநில பொருளாளருக்கு போலீஸ் வலை*
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் என்.ஆர்.என். பாண்டியன் (76) விசுவஹிந்து பரிசத்தின் மாநில பொருளாளராக உள்ளார். இவருக்கும் இவரது உறவினரான தியாகராஜன் (61) என்பவருக்குமிடையே சொத்துதகறாறு இருந்துவந்த நிலையில் தியாகராஜனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியநிலையில் பாண்டியன் கடந்த 9 ம்தேதி சம்பந்தப்பட்ட விவசாய தோட்டத்தில் தோப்பில் இருந்த 80 தென்னை மரங்களை 20 பணி ஆட்களை வைத்து வெட்டி லாரியில் ஏற்றிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தியாகராஜன் துவரங்குறிச்சி போலீசில் அளித்த புகாரின்பேரில் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்தனர். முசிறி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இன்று பிற்பகல் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாண்டியனை கைது செய்யசென்றபோது அவர் தலைமறைவானார். இதனையடுத்து அவரது காரை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு எடுத்துவந்த போலீசார் பாண்டியனை தேடி வருகின்றனர்.
On Sunday, June 14, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
விராலிமலை அருகே குடும்பத்தகறாறில் கிணற்றில் குத்தித்த இளம்பெண் உயிருடன் மீட்பு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள தேங்காய்திண்ணிப்பட்டியைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி மதுமதி (19). கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணமான இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத்தகறாறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றும் வழக்கம் போல் இருவருக்கும் தகறாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனஉலைச்சலுக்கு ஆளான மதுமதி அவர்களது தோட்டத்திற்குச் சென்று அங்கிருந்த சுமார் 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத வறண்ட கிணற்றினுள் குதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மணப்பாறை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இருப்பினும் பலத்த காயமடைந்த நிலையில் கிணற்றில் இருந்து கூக்குரல் எழுப்பிய மதுமதியை மீட்க தீயணைப்புதுறையினருக்காக காத்திராமல் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கிணற்றினுள் இறங்கி கயிற்றுக்கட்டில் மூலம் கயிறு கட்டி மதுமதியை கிணற்றில் இருந்து மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.
Thursday, June 11, 2020
On Thursday, June 11, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம்
பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந்துள்ளதை கான்கரிட் கலவை கொண்டு செப்பனிடப்பட்டு
வரும் பணியை பொதுபணித்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி
இன்று(11.06.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்கால் சுமார்
19500 ஏக்கர் பாசனம் அளிக்கக்கூடியது இந்த வாயக்காலின் தலைப்பு மதகு 1934ஆம் ஆண்டு
கட்டப்பட்டது.
இந்த தலைப்பு மதகில் அடைப்பு பலகைகள் உள்ள பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார
பகுதிகள் செல்லும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க
கைப்புறச்சுவர் திடிரென சாய்ந்து விட்டது. இச்சுவர் செங்கல் கற்களைக் கொண்டு கட்டப்பட்டவை
மேலும் 80 ஆண்டுகளைக் கடந்து உள்ளதாலும் பழுதடைந்துவிட்டது.
இச்சுவர் விழுந்ததினால் பெருவளை வாய்க்காலின் பாசன நிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதில்
எவ்வித இடையறும் இல்லை. இருப்பினும் போக்குவரத்திற்கு சிரமம்இல்லாமல் இரவு பகலாக
இப்பழுதடைந்த பகுதியினை கான்கிரிட் கலவை கொண்டு செப்பணிடப்பட்டு வருகின்றது. இன்னும் 15
நாட்களுக்குள் பணிகளை முழுமையாக முடிக்கப்படும் என பொதுபணித்துறை திருச்சி மண்டல
தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆய்வின் போது பொதுபணித்துறை நடுகாவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டைசெல்லம் பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்புக்கோட்ட
செயற்பொறியாளர் பாஸ்கர் உதவி பொறியாளர்கள் ஜெயராமன் புகழேந்திரன் மற்றும்
பலர் உடனிருந்தனர் .
On Thursday, June 11, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது இதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்று 1875 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. திருச்சியில் இன்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. திருச்சியில் நேற்று வரை 132 பேர் கொரோனாவிற்கு பாதித்து இருந்தனர். இதில் 105 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். ஒரே ஒரு மூதாட்டி மட்டும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
இதை அடுத்து 26 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சமயபுரம் பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக 2 பேர் தனிமை படுத்துவதற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர், தற்பொழுது அவர்கள் இருந்த இடம் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் எந்த வித பாதுகாப்பும் ஏற்படுத்தாமல் மேலும் அப்பகுதியில் கொரோனா பரவும் அச்சம் நிலவி வருகிறது,
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் விசுவநாதன் அவர்களிடம் செய்தியாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கேட்ட பொழுது சரியாக பதில் அளிக்கவில்லை பிறகு நாங்க பாக்காத பிரஸ் அஹ என கூறி மழுப்பி சென்றுவிட்டார்.
Wednesday, June 10, 2020
On Wednesday, June 10, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஜீன் 10
இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம்.
இந்தியவில் கொரோனா பாதிப்பு அடுத்து அனைத்து வழிபாட்டு தலங்களும் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி மூடப்பட்டது.
5ம்முறையாக ஊரடங்கு உத்தரவிட்டதை தொடர்ந்து
ஜூன் 1-ஆம் தேதி முதல் பல்வேறு
தளர்வுகளும் வழங்கப்பட்டது
இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதையடுத்து அனைத்து
மத வழிபாட்டுத் தலங்களை திறக்கப்பட வேண்டும் என தொடர்ந்து போரட்டம் நடித்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் முன்பு இந்து
முன்னணி
முன்னணி
பேச்சாளர் மணிகண்டன் தலைமையில்
ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது தமிழகத்தில் வழிபாட்டு தளங்களை திறக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...