Wednesday, January 13, 2021

On Wednesday, January 13, 2021 by Tamilnewstv   

 திருச்சி  தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வரும் 16ஆம் தேதி முதல்        களப்பணியாளர்களுக்கு செலுத்தப்படுகிறது. 


இதற்காக தமிழ்நாட்டிற்கு வந்த கொரோனா தடுப்பூசி திருச்சி சென்றடைந்தது. அதன்பின்னர்,கொரோனாதடுப்பூசி திருச்சி சுகாதார மண்டலத்திற்கு உள்பட்ட திருச்சி தஞ்சை, திருவாரூர் நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்பட 9 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வனிதா, திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சித்ரா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "முதல்கட்டமாக தமிழ்நாட்டில் பணியாற்றும் முன் களப்பணியாளர்கள் ஆறு லட்சம் பேருக்கு வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதற்காக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு செலுத்துவதற்காக 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன. ஒத்திகை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து தடுப்பூசி செலுத்துவதற்கு தயார் நிலையில் அரசு உள்ளது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், நகர சுகாதார மையம், ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தினமும் 100 பேருக்கு செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. முன்கள பணியாளர்கள் முடிந்த பின்னர் பொதுமக்களுக்கு செலுத்தப்படும்.

தடுப்பு ஊசி ஒரு நபருக்கு இரண்டு (டோஸ்) முறை செலுத்த வேண்டும். முதல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு 14 நாள்களுக்குப் பிறகு அடுத்தகொரோனாதடுப்பூசி செலுத்தப்படும். மொத்தம்கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு 42 நாள்களுக்குப் பின்னரே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அனைத்து பரிசோதனைகளையும் முடித்த பின்னரே தடுப்பூசிகள் செலுத்தப்படுவதால் மக்கள் அச்சமின்றி தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.

இது தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது போல் வரும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி முன்கள பணியாளர்கள் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள முடியும்.

இதன் காரணமாக முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவில்லை. அவசியம் ஏற்பட்டால் மக்களின் அச்சத்தைப் போக்க நான் தடுப்பூசி செலுத்தி கொள்வேன். தடுப்பூசி செலுத்திய பின்னர் 30 நிமிடங்களுக்கு சம்பந்தப்பட்ட நபர் மருத்துவர்கள், செவிலியர்கள் கண்காணிப்பில் இருப்பார். அவருக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை செய்ய மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்காமல் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து இருக்க வேண்டும். இந்திய மருத்துவ கழகத்துடன் இணைந்து தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக பல தனியார் மருத்துவமனைகள் முன்வந்து பதிவு செசெய்துள்ளார்கள் என்று தெரிவித்தார்

On Wednesday, January 13, 2021 by Tamilnewstv   

 திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து



 திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பாக நியாயவிலை கடைகளில் பொங்கலுக்காக வழங்கப்படுகிற இலவச பொருட்களுக்காக ஆளும் அனைத்திந்திய அண்ணா திமுக விளம்பர  பதாகைகள் வைத்து கட்சி கொடியை கட்டி வழங்குவதை கண்டித்து நீதிமன்றம் அறிவுறுத்திய படி விளம்பர பதாகைகள் கொடிகளையும் அகற்ற கோரியும்


திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொன் மலை பகுதி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி தெரு பகுதியில் நீண்ட நாட்களாக பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடிய மதுபான கடையை அகற்றக்கோரி இளைஞர் பெருமன்றத்தின் தொடர் போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட நிர்வாகம் செவிசாய்க்காத காரணத்தினால் இளைஞர் பெருமன்ற நிர்வாகிகளுடன் சென்று அந்த கடையை அகற்றுவதற்கான கோரிக்கை மனுவையும் இணைத்து  மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்

Tuesday, December 08, 2020

On Tuesday, December 08, 2020 by Tamilnewstv   

 திருச்சி ரயில்வே தொழிலாலர்கள்,விவசாயிகள் போராட்டத்தால் மத்திய மோடி அரசு கவிழம் - திருச்சியில்  SRMU துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் பேட்டி 



மத்திய மோடி அரசு கொண்டு வந்த 

3வேளாண்  சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ராஜஸ்தான், மத்தியபிரதேஷ், பஞ்சாப் 

 


மாநிலத்தைச் சேர்ந்த 1 லட்சம் விவசாயிக டெல்லி முற்றுகையிட்டு கடந்த 12நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும்   ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இன்று இந்திய அளவிலான பாரத் பந்த் 

அறிவிக்கப்பட்டது.

பல்வேறு மாநில கடைகள் அடைக்கப்படும் மறியலகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி எஸ்.ஆர்.எம்.யு ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் SRMU துணை பொதுச் செயலாளர் 

வீரசேகரன் தலைமையில் பொன்மலை ஆர்மரிகேட் முன்பு விவசாயிகளுக்டு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் 

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும்,  ஊட்டி மலை ரயிலை இயக்குவதை  தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தும், 

 மேலும் தொழிலாளர்களை பாதுகாத்துவரும் தொழிற்சங்கங்களுக்கு எதிரான தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தை கண்டித்தும்,  8 மணி நேர வேலையை 

12 மணி நேரமாக மாற்றுவதை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இதில் ரயில்வே தொழிலாளர்கள் 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு  

விவசாயிகளுக்கு ஆதரவகவும் மத்திய, மாநில அரசை கண்டித்து 

கோஷமிட்டனர்.

 

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 

SRMU துணை பொதுச் செயலாளர் வீரசேகரன்


சர்வாதிகாரம் போக்கில் செயல்படும் மோடிக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்திரா காந்தி காலத்தில் எப்படி இந்தியா ஆட்சியை இழந்தாரோ அதே போல்  ரயில்வே தொழிலாளர்கள்,

பாமர மக்கள்

விவசாயிகள் 

போராட்டத்தால் மத்திய மோடி அரசு கவிழம் என கூறினார். 


இந்த ஆர்ப்பாட்டத்தையெட்டி ஆர்மரிகேட்  முன்பு பாதுகாப்பு போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

On Tuesday, December 08, 2020 by Tamilnewstv   

 திருச்சி கரூர் செல்லும் சாலையில் குடமுருட்டி பாலம் அருகில் சரக்கு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விழுந்தது அந்த லாரியை மீட்கும் பணியில் அரசு பணியாளர்களும் மின்கம்பத்தில் மோதியதால் மின்வாரிய ஊழியர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்

சமீபத்தில் கரூர் செல்லும் சாலை சீர்அமைக்கப்பட்டு தார் சாலை புதிதாக போடப்பட்டிருந்தது சில நாட்களுக்கு முன் தார்சாலை வேலை நடைபெறும் பொழுது வாகனங்கள் வேகமாக செல்ல முடியாததால் ஒன்றின் பின் ஒன்று சென்றது 


அதே  போன்று லாரி கவிழ்ந்ததால் லாரி மீட்புப் பணியில் ஈடுபட்டு லாரியை மீட்டனர் அதனால் கரூர்  சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

On Tuesday, December 08, 2020 by Tamilnewstv   

 அயிலை சிவசூாியன்,அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழு மாவட்ட  ஒருங்கிணைப்பாளா்  தலைமையில் மறியல் போராட்டம்


   

விவசாயிகள் போராட்டத்திற்ககு ஆதரவான பந்த் மற்றும் மறியல் போராட்டம்  


டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் தொடா் போராட்டத்திற்க்கு ஆதரவாக இன்று நடைபெறும்  நாடுதளுவிய பந்த் மற்றும் மறியல் போராட்டத்தில் அந்தநல்லூா் ஒன்றியம் குழுமணி,கோப்பு மணிகண்டம் ஒன்றியம் சோமரசம் பேட்டை பகுதிகளில் 100−சதவித கடையடைப்பு நடைபெற்றது.

சோமரசம் பேட்டையில் எம்.ஜி.ஆா் சிலை அருகே  இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பாக  நடைபெற்ற சாலைமறியலில் 100− மேற்பட்டோர் பங்கு பெற்றனா் .1−மணி நேரம் சாலை போக்கு வரத்து தடை பட்டது.


         

Monday, December 07, 2020

On Monday, December 07, 2020 by Tamilnewstv in ,    

 திருச்சி 


2021 சட்டமன்ற தேர்தலுக்காக, 
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்து கேட்பு கூட்டம்,  திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தொடங்கியது.


திருச்சி மத்திய, வடக்கு மாவட்டம், தெற்கு மாவட்டம் சார்பில் இன்று நடைபெற்று வரும் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குமு தலைவரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி N.சிவா, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்  அடங்கிய குழுவினர் பங்கேற்று மனுக்களை பெற்று வருகின்றனர்.. இந்த கூட்டம் கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்றது.இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயி சங்கத்தினர், வியாபாரிகள், வணிகர்கள், மருத்துவர்கள், இன்ஜினியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், மோட்டார் வாகன , ஓட்டுனர் உரிமையாளர்கள் ,கட்டிட கலைஞர்கள்  உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்  தங்களது  கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும்  நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில்  150க்கும் மேற்பட்டோர்  தங்களது கருத்துக்கள் அடங்கிய கடிதங்களை போட்டனர்.. இந்நிகழ்ச்சியில்
தெற்கு மாவட்ட பெறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட பெறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியகராஜன்,
சட்டமன்ற உறுப்பினர்கள்  சௌந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார் ,மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி ,ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்
On Monday, December 07, 2020 by Tamilnewstv in ,    

 திருச்சி-07.12.20


விவசாயிகள் போராட்டத்திற்கு பங்கேற்க செல்ல விடாமல் தன்னை தடுத்து வைத்திருப்பதை கண்டித்து அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டம்



மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கலந்து கொள்ள செல்வதற்கு முன்பாக அவர்களை  காவல் துறையினர் கைது செய்தனர்.தொடர்ந்து அவர் டெல்லி போராட்டத்திற்கு செல்ல விடாமல் காவல் துறையினர் தடுத்து வருகின்றனர். இந்நிலையில் தன்னையும் தன்னுடைய விவசாய சங்கத்தை சேர்ந்தவர்களையும் டெல்லிக்கு செல்ல அனுமதிக்காததை கண்டித்தும் தங்களை தடுக்க கூடாது என வலியுறுத்தியும் இன்று அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காவல் துறை அனுமதி அளிக்கவில்லையென்றால் அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்வேன் என அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

பேட்டி: அய்யாக்கண்ணு, மாநில தலைவர்-தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்

On Monday, December 07, 2020 by Tamilnewstv in    

 சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா


சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான மகசூலை பெற முடியும்.  ஆரோக்கியமான மண்ணே அனைத்து விவசாயித்திற்கும்  ஆதராம்.  பயிர் சாகுபடியில் அதிக மகசூலைப் பெற ஆரோக்கியமான மண் இன்றியமையாதது.  ஆகவே மண் வளத்தை பெருக்கும் நோக்கோடு ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 5-ம் நாள் உலக மண்வள தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வரும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் திருச்சிராப்பள்ளி வேளாண்மைத் துறையும் இணைந்த உலக மண்வள தினவிழா 05.12.2020 அன்று சிறுகமணி தேர்வு நிலை சமுதாயக் கூடத்தில் நடத்தியது. இவ்விழாவில் புதுதில்லியிலிருந்த மண்வள தினம் துவக்க விழா நேரடி அலை மூலம் காணொலி காட்சியாக விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இவ்விழாவை தலைமை ஏற்று துவங்கி வைத்து சிறப்புரையாற்றிய வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.ஆறு.பெரியகருப்பன் அவர்கள் மண்வள மேம்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் மண்வள அட்டை குறித்து எடுத்தரைத்தார்.  இவ்விழாவில் சிறப்புரையாற்றிய பெட்டவாய்த்தலை கூட்டுறவு வங்கி தலைவர் திரு.முஏளு. செந்தில்குமார் அவர்கள் தொழில்நுட்ப கையேடுகளை வெளியிட்டு விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கினார். இவ்விழாவில் வாழ்த்துரை வழங்கிய தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் திரு.பாபுராஜ் அவர்கள் மண்வள மேம்பாட்டில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்தும் வேளாண் பொறியியல் துறை உதவிபொறியாளர் திரு.அ.வெற்றிவேல் அவர்கள் மண்வள மேலாண்மையில் பண்ணை இயந்திரங்களின் பயன்பாடு குறித்தும் அன்பில் எடுத்தரைத்தனர். இதை;த தொடர்ந்து தொழில்நுட்ப உரைகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் வழங்கப்பட்டது. மண்வளத்தில் உயிர் உரங்கள் மற்றும் மட்க வைப்பான்கள் குறித்து அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் கி.க.அனிதா அவர்களும்ää மண்வள மேம்பாட்டில் பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்கள் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.தமிழ்ச்செல்வன் அவர்களும் மண் மற்றும் நீர் பரிசோதனையும்ää மண்வள மேலாண்மையில் மண்வள அட்டையின் பங்கும் குறித்து மண்ணியில் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் வெ.தனுஷ்கோடி அவர்களும் மண்வள சீர்கேட்டின் இரசாயன பூச்சிக்கொல்லியின் பங்கு இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மைத் தொழில்நுட்பங்கள் குறித்து பயிர்பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் இரா.ஷீபா ஜாஸ்மின் அவர்களும் மண்வளமும் மனித நலமும் குறித்து மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் கா.கீதா அவர்களும் எடுத்தரைத்தனர்.  இதனைத் தொடர்ந்து முன்னோடி விவசாயிகள் மண் வளம் பேணுதல் குறித்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். 




இத்துடன் மண்வள மேலாண்மை குறித்து கருத்துக் கண்காட்சியை விவசாயிகள் பார்வையிட்டு பயன்பெற்றனர். விழாவின்  ஆரம்பத்தில் வரவேற்புரை வழங்கிய சிறுகமணி வோளண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.தமிழ்ச்செல்வன் அவர்கள் மண்வள மேம்பாட்டின் மண் பரிசோதனையின் அவசியம் குறித்து எடுத்தரைத்தார். இறுதியாக தொழில்நுட்ப வல்லுநர் (மண்ணியல்) முனைவர் வெ.தனுஷ்கோடி அவர்கள் நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழாவானது இனிதே முடிவடைந்தது. இவ்விழாவில் 200-க்கு மேற்பட்ட விவசாயிகள்  மற்றும் வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

Tuesday, December 01, 2020

On Tuesday, December 01, 2020 by Tamilnewstv   

 பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக  விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை  வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். 

திருச்சி் மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே  பிக்சாண்டார் கோயில் ஊராட்சியில் இன்று முதன் முறையாக  விவசாயிகளுக் கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை  வேளாண்மை இணை இயக்குநர் திரு.பெரியகருப்பன் அவர்கள்  தொடங்கி வைத்து  திட்டம் குறித்து விளக்க உரை ஆற்றினார். தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவு செய்யப்பட்ட  வயல்களை ஆய்வு செய்தார்.  



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிச்சாண்டார்கோவில் முன்னோடி விவசாயிகளுக்கு வேளாண்மை துணை இயக்குநர் திரு.லட்சுமணசாமி பயிர்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு குறித்து விளக்கமாக எடுத்து கூறினார். அதுபோலே ஒவ்வொரு ஊராட்சியிலும் 10 முன்னோடி விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களிடம்  பூச்சி மற்றும் நோய்க்கட் டுப்பாடுகள்  குறித்து பயிற்சி் அளிக்கப்பட்டு அந்த பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு குறித்து  விளக்கமளித்து பயிர்களை காக்க  ஆலோசனைகள்  வழங்கப்படும். இந்நிகழ்வில்   வேளாண்மை உதவி இயக்குநர் தாகூர், வேளாண்மை அலுவலர் உமா மகேஸ்வரி, துணை வேளாண்மை அலுவலர் சின்னப்பாண்டி உடன் இருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்து இருந்தார். வேளாண்மை உதவி அலுவலர்கள் பாஸ்கர், பிச்சைபிள்ளை மற்றும் ஆனந்த் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.